India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் க.பரமத்தியை சேர்ந்தவர் வினோத்குமார் (30). இவர் நேற்று முன்தினம் சாலையில் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1250 பணத்தினை பறித்து சென்றனர். விசாரணை மேற்கொண்டு போலீசார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மனுபடி சாய் தேஜா (27), கம்மா சங்கரம்மா (25), பாலாஜி (19), ஆகிய மூன்று பேரை க.பரமத்தி போலீசார் நேற்று கைது செய்தனர்.

கரூர், கடவூர் தாலுக்கா தேவர்மலை ஊராட்சிக்கு உட்பட்ட சீத்தப்பட்டி மாரியம்மன் கோயிலில் கடந்த 2 ஆம் தேதி கோயிலில் உள்ள உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராமசாமி அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு இளையராஜா, சதீஷ் குமார், அஸ்வின் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கரூர், வெஞ்சமாங்கூடலூர் என்ற ஊரில் அமைந்துள்ளது 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில். 63 நாயன்மார்களில் சுந்தரர் நாயனாரால் பாடல் பெற்ற இந்தலத்தில் கருவறையில் மூலவரான கல்யாண விகிர்தீஸ்வரர், நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இங்கு திருமண தோஷம், புத்திர தோஷம், பெண்களின் சாபம் போன்றவை நீங்க வேண்டிக் கொள்ளலாம்.இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை இன்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் ஆய்வு செய்தார். திட்டப் பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கரூர், வெஞ்சமாங்கூடலூர் என்ற ஊரில் அமைந்துள்ளது 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில். 63 நாயன்மார்களில் சுந்தரர் நாயனாரால் பாடல் பெற்ற இந்தலத்தில் கருவறையில் மூலவரான கல்யாண விகிர்தீஸ்வரர், நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இங்கு திருமண தோஷம், புத்திர தோஷம், பெண்களின் சாபம் போன்றவை நீங்க வேண்டிக் கொள்ளலாம்.இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

கரூர் மாவட்டத்தில் நாளை காலை10 மணி முதல் மதியம் 1மணி வரை ரேஷன் குறைதீர் முகாம் நடக்கிறது. அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடக்கிறது என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

கரூரில் தாட்கோ மூலம், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர், மாணவிகள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகள் சேர்ந்து படித்திட விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் உலக மகளிர் தினத்தையொட்டி நாளை (மார்ச் 8) மாவட்ட காவல்துறை சார்பில் பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண் காவலர்கள் மற்றும் ஊா்க்காவல் படையினா் ஆகியோா்கள் கலந்துகொள்ளலாலம் முதல் 10 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க உள்ளார்.

கரூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாக பொறுப்பாளர்கள் பலர் திடீரென கட்சியிலிருந்து விலகியுள்ள தகவல் அரசியல் தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர், நகர பொறுப்பாளர்கள் மற்றும் சில முக்கிய நிர்வாகிகள் தங்களது பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
Sorry, no posts matched your criteria.