Karur

News July 24, 2024

கரூரில் முன்னாள் அமைச்சரிடம் கிடுக்குப்பிடி விசாரணை

image

கரூரில் 100 கோடி ரூபாய் நிலத்தை மோசடி முறையில் பத்திரப்பதிவு செய்ததற்காக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கடந்த வாரம் கேரளாவில் கைது செய்தனர். இவரை 2 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணியுடன் நீதிமன்ற காவல் முடிவடைவதையொட்டி, நேற்று இரவு 12.00மணி வரை சிபிசிஐடி போலீசார் விஜயபாஸ்கரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

News July 24, 2024

தணிக்கையாளர்கள்  விண்ணப்பிக்க அழைப்பு

image

கரூர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்புசங்கங்கள், ஊராட்சி அளவிலான குழுகூட்டமைப்புகள் , வட்டார அளவிலான குழு கூட்டமைப்புகளின் தணிக்கைக்கான பட்டய கணக்காளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04324-257377, 9442563538 தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.

News July 24, 2024

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்களுடன் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எதிர்வரும் ஜூலை 31 ஆம் தேதியன்று மாலை 3.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும் என்பதை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 23, 2024

மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 

image

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பிரபல தனியார் நிறுவனத்தின் வேலையளிப்போர் கலந்து கொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள 4000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களைத்தேர்வு செய்ய உள்ளதாக ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.

News July 23, 2024

அரசு பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

image

இன்று புகலூர் அடுத்து தென்னிலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நாள்தோறும் வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் மதியம் வழங்கும் உணவினை சுவைத்து பார்த்து தரத்தை அறிந்து கொண்டார். மேலும் சரியான நேரத்தில் உணவுகள் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தினார்.

News July 23, 2024

விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

image

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 26-ம் தேதி, காலை 11 மணியளவில் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மாவட்டம் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்கத்தினரும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் தங்கவேல் அவர்கள் கூறியுள்ளார்

News July 23, 2024

46 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம்

image

கரூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் ஆக.8 வரை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை ‘மக்களுடன் முதல்வர்’முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் 8 வட்டார ஊரக பகுதிகளில் 46 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. முகாமில் 15 துறைகளை சேர்ந்த 44 சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளிக்கலாம். இன்று அரவக்குறிச்சி, கடவூர், கரூர், தோகைமலை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.

News July 23, 2024

3 ஆண்டுகளில் ரூ,6 கோடியில் மானியம் – ஆட்சியர்

image

கரூர் மாவட்டத்தில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 20,271 பேருக்கு ரூ.4.28 கோடி,தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2,360 பேருக்கு ரூ.4.72 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கிழ் 20,384 பேருக்கு ரூ.1.13 கோடி என 3 ஆண்டுகளில் 43,061 விவசாயிகளுக்கு ரூ.6.2 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News July 22, 2024

மனு நீதி முகாம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், கட்டளை குறுவட்டம், சேங்கல் கிராமத்தில், 24.07.2024 அன்று பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு அரசு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 22, 2024

ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  

image

கரூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்,  பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டார். இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் உள்ளிட்ட மொத்தம் 482 மனுக்கள் பெறப்பட்டன.

error: Content is protected !!