Karur

News September 11, 2024

பாஜக சார்பில் இம்மானுவேல் சேகரன் படத்திற்கு மரியாதை

image

கரூர் மாவட்டத்தில் இன்று இம்மானுவேல் சேகரின் 67-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் V.V.செந்தில்நாதன் கலந்து கொண்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். உடன் மாவட்ட பொது செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் ரமேஷ், இளைஞர் அணி மாவட்ட பொது செயலாளர் சரண்ராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

News September 11, 2024

நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்

image

மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி (ம) ஆராய்ச்சி மைய வளாகத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் 13-ந் தேதி காலை 10.30 மணிக்குள் வந்து பயிற்சியில் பங்குகொள்ளுமாறு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் அமுதா கேட்டுக்கொண்டுள்ளார்.

News September 11, 2024

பணம் தராததால் பாட்டியை கொன்ற பேரன்

image

கடவூர், மைலம்பட்டியைச் சேர்ந்த காஜா மொய்தீன் (30) குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், தனது பாட்டி சுலைஹாபீவி (75) இடம் நேற்று முன்தினம் பணம் கேட்டுள்ளார். அவரது பாட்டி இல்லை என தெரிவித்தால், ஆத்திரமடைந்த காஜாமொய்தீன் அரிவாள்மனையால் பாட்டியை வெட்டி விட்டார். படுகாயமடைந்த பாட்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சொல்லு வழியில் இறந்தார்.

News September 11, 2024

ரூ.10 நாணயத்தை ஏற்க உத்தரவு

image

ரூ.10 நாணயத்தை ஏற்க வேண்டும் என கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூரில் செயல்படும் எரிபொருள் நிலையம், வர்த்தங்கள், வங்கிகளில் ரூ.10 நாணயத்தை ஏற்க மறுக்கின்றனர். இதை அனைத்து வணிகர்கள், எரிபொருள் நிலையங்கள், வர்த்தகங்கள், வங்கிகள் ஆகியோர் பெற்றுக்கொள்ளப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 10, 2024

கரூர் ஆட்சியரிடம் Exஅமைச்சர் மனு

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் , கரூர் , அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இறப்பு மற்றும் இரட்டை பதிவு, வாக்காளர்களின் பெயர்களை நீக்கம் செய்தால் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன் வைத்து முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ,மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் நேரில் சந்தித்து இன்று மனு அளித்தார்.

News September 10, 2024

கரூரில் போலி விளம்பரம் பணத்தை இழந்த முதியவர்

image

அரவக்குறிச்சியை சேர்ந்தவர் முருகேசன். பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை சேமிப்பதில் ஆர்வம் கொண்ட இவர், ‘ராஜு ஓல்ட் காயின் கம்பெனியின் விளம்பரத்தை முகநூல் பக்கத்தில் பார்த்திருக்கிறார்.அந்நிறுவனம் முருகேசன் சேமிப்பில் உள்ள பழைய நாணயங்களுக்கு ரூ36 லட்சம் வரை பணம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதை நம்பி ஆன்லைன் மூலமாக ரூ.20,800 பணத்தை இழந்துள்ளார்.இது குறித்து, போலீசார் விசாரிகின்றனர்.

News September 10, 2024

அகில இந்திய தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

image

கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்ளாக கலந்து கொள்ள விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இதற்கு கடைசி தேதி 18.9.24 ஆகும். மேலும், விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இதற்கு கரூரைச் சேர்ந்தவர் உடனே விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 10, 2024

கரூர் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு

image

கரூரில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் வரும் 14-09-2024 ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணிவரை கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவுறுத்துள்ளார்

News September 9, 2024

கரூரில் நாளை விளையாட்டு போட்டிகள் துவக்கம்

image

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான நாளை கரூர் விளையாட்டு அரங்கில் நடைபெறுகின்றன. 2024 – 25 ஆம் ஆண்டிற்கு போட்டியில் மாணவ, மாணவிகள் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்கின்றனர். மேலும், விவரங்களுக்கு கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலரின் அலைபேசி எண். 7401703493 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் இன்று தெரிவித்துள்ளார்.

News September 9, 2024

கரூரில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤கரூர், காணியாளம்பட்டியில் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3பேரை போலீசார் கைது செய்தனர். ➤கரூர் வடக்கு பாளையம் பகுதியில் பூட்டி இருந்த 3 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ➤தாளியாம்பட்டியில் விநாயகர் சிலையை கரைக்க ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் கொண்டுச் சென்றனர். ➤மாயனூர் தடுப்பணைக்கு 17,718 கன அடி நீர்வரத்து.

error: Content is protected !!