Karur

News March 28, 2025

குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 

image

கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள, வி.செந்தில் பாலாஜி அறக்கட்டளை சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும், 30ல் தொடங்குகிறது. இலவச புத்தகங்கள் புதிய பாடத்திட்டத்தின்படி வழங்கப்படுகிறது. இலவச டெஸ்ட் பேட்ஜ் வசதியுடன் தினசரி மற்றும் வீக்எண்ட் வகுப்புகள் நடக்கிறது. இதில், கலந்து கொள்ள விரும்புவோர், 81481 92175 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். உடனே ஷேர் செய்யுங்கள். 

News March 28, 2025

விடுதியில் சேர ஏப்.6 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

image

தமிழகத்தில், 2025ம் ஆண்டு சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கு, மாநில அளவிலான தேர்வு போட்டி வரும் ஏப்ரல் 8 ம் தேதி நடக்கிறது. இதில், சேர்வதற்காக, www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும், 6 தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 17 வயது நிரம்பிய பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 28, 2025

10ம் வகுப்பு தேர்வு: 12,590 மாணவ, மாணவியர் பங்கேற்பு

image

கரூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி அடுத்த மாதம் (ஏப்.) 15 வரை நடக்கிறது. இதில் 59 தேர்வு மையங்களில், 5,706 மாணவர், 5,781 மாணவியர், தனித்தேர்வர், 1,103 என மொத்தம், 12,590 மாணவ, மாணவியர் தேர்வெழுத உள்ளனர். தேர்வுகளில் முறைகேடுகள் செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிப்பதற்கு, 110 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

News March 27, 2025

கரூர் மக்கள் வெளியே வர வேண்டாம்!

image

தமிழத்தில் கரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று முதல் 31ஆம் தேதிவரை வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை (107°F மேலாக) பதிவாகக்கூடும் என வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். எனவே, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி முதியவர்கள், கர்ப்பிணிகள் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 27, 2025

கரூர்: ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

image

அமைச்சர் செந்தில்பாலாஜி சொந்த ஊரான கரூரில் டாஸ்மாக் மதுபான ஊழல் புகார் தொடர்பாக அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் “1000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து 1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்?” என்று போஸ்டரில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 27, 2025

கரூர் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர்க் கூட்டம்

image

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை மாலை எரிவாயு நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் டி.ஆர்.ஓ தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கேஸ் சிலிண்டர்களில் முறைகேடு ஏஜென்சிகளையும் மெத்தனப்போக்கு உள்ளிட்ட புகார்கள் குறித்து விவாதிக்கப்படும். இந்தக் குறைதீர்க் கூட்டத்தில் வாடிக்கையாளர்கள், ஏஜென்சிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள். 

News March 27, 2025

கேன் வாட்டரை பயன்படுத்துபவரா நீங்கள்? உஷார்!

image

கோடைகாலம் முன்னரே கரூரில் குடிநீர் கேன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தநிலையில் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News March 26, 2025

கரூரில் உள்ள ஜீவ சமாதி

image

கரூரில் உள்ள சுற்றுலாத் தளங்களிலேயே எவருக்கும் அதிகம் தெரியாத ஒரு அமைதியான இடம் ‘சதாசிவ பிரம்மேந்திர ஜீவ சமாதி’. கரூரில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள நெரூரில் காவேரி ஆற்றங்கரையில் இருக்கும் இந்த இடம், இங்கு வருபவர்களுக்குள் நிச்சயம் அமைதி உணர்வைக் கடத்தும். இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஏற்கனவே சென்றவர்கள் தங்களின் அனுபவத்தை கீழே பகிரலாம்.

News March 26, 2025

தியாகிகள் வாரிசுகள் வழித்தோன்றல்களின் குறைகேட்பு நாள்

image

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளின் வழித்தோன்றல்களின் குறைகளை தெரிவிக்க நாளை மார்ச் 27 காலை 11 மணியளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற கூட்டம் நடைபெற உள்ளது. தியாகிகளின் வாரிசுகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 26, 2025

கரூர்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

image

கரூரில், விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!