Karur

News October 16, 2024

கரூரில் கனமழை எதிரொலி: கலெக்டர் அறிவுறுத்தல்

image

கரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்துவருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், தற்காப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் கலெக்டர் தங்கவேல் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொதுமக்கள் கனமழைக்கான திட்டமிடல், முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்கூட்டியே அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

News October 15, 2024

கரூரில் குடும்ப அட்டை குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கரூரில் பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்க குறை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் அக்.19ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்டார வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News October 15, 2024

கரூர் மின்சாரத்துறை சார்பில் புகார் எண் அறிவிப்பு

image

கரூர் மின்பகிர்மான வட்டத்தில் உள்ள பகுதிகளில் மின் விநியோகம் சம்பந்தமாகவோ அல்லது சேதமடைந்த மின்கம்பங்கள், மின்கம்பி அறுந்து கிடப்பது உள்ளிட்ட தகவல்களை தங்களது பகுதிகளில் உள்ள கோட்ட அலுவலர்களுக்கு 9498794987 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறு மேற்பார்வை பொறியாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 15, 2024

கரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

கரூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறும், கீழ்காணும் தற்காப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்லவும், மேலும் நீர்நிலைப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் அறிவித்துள்ளார்.

News October 14, 2024

பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

image

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் 1077, 04324-256306 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் கொண்ட 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும் (TN Alert) செயலியின் மூலம், பொதுமக்கள் வானிலை அறிக்கைகளை தெரிந்து கொள்ளலாம் என கரூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News October 14, 2024

BREAKING: சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

image

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க, தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீசாருக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. குறிப்பிட்ட பட்டியல் சாதி குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் கடந்த 7ஆம் தேதி மனு அளித்த நிலையில், நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

News October 14, 2024

கரூர் மாணவர்களுக்கு கலெக்டரின் அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் 2024ஆம் ஆண்டு மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 17ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் கரூர் அரசு கலைக்கல்லூரியில்நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு (04324-255077) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News October 14, 2024

கரூர் மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் பருவமழை தொடங்கி ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டத்திற்கு அடுத்த சில நாள்கள் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இப்பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், குளிர்ச்சியான சூழல் நிலை நிலவுகிறது.

News October 12, 2024

கரூர் மாவட்டத்திற்கு மழை இருக்கு

image

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், வாங்கல், ஆகிய இடங்களில் லேசான மழையும் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என இன்று வானிலை அறிக்கை மையம் அறிவித்துள்ளது.

News October 12, 2024

தான்தோன்றி மலைகோயில் இன்று தேரோட்டம்

image

கரூர்தானோன்றிமலை வெங்கட்ரமணா சுவாமி கோயில் புரட்டாசி பெரும் திருவிழா இன்று தேரோட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில் இன்று புரட்டாசி 4ஆவது சனிக்கிழமை சிறப்பு வழிபாடும், திருத்தேர் பிடித்தலும் நடைபெறுகிறது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அதிகாலை 4 மணி முதல் 5 மணி தேரில் எழுந்தருதல் நிகழ்ச்சி காலை 8:15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நடைபெறும்.

error: Content is protected !!