India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதல்வாரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தினை சார்ந்த சுயததொழில் செய்ய விரும்பும் முன்னாள் படைவீரர்கள் / படைப்பணியின் போது மரணமடைந்த படைவீரர்களின் கைம்பெண்கள் தங்களது விருப்ப விண்ணப்பத்தினை திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தில் 15.10.2024-க்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மீ.தங்கவேல்.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்
கரூர் மாவட்டத்தில் அக்டோபர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் 2024 ஆம் மாதத்திற்கான கூட்டம் 25.10.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.கரூர் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வந்து நேரில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் 21.10.2024 ஆகும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் பணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பணிகள் நடக்க இருப்பதால் மேற்கொண்ட பகுதிகளில் குப்புரெட்டிபட்டி, பணிக்கம்பட்டி, நடுப்பட்டி, வளையப்பட்டி, எருமநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, மேட்டுமருதூர், வேலாங்காட்டுப்பட்டி, செம்மேட்டுப்பட்டி, ஆகியபகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் புகளூரில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனம் தான் இந்தியாவிலே மரக்கூழ் பயன்படுத்தாமல் கரும்புசக்கையில் தாள் தயாரிக்கும் முதல் தொழிற்சாலையாகும். இந்த தொழிற்சாலை 1979ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, 1984இல் அதன் முதல் உற்பத்தியைத் தொடங்கியது. மேலும் இது கரூரின் அடையாளமாகத் திகழ்கிறது. ஷேர் பண்ணுங்க..
தீபாவளி பண்டிகை வர உள்ளதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்க கூடிய வெடிகளை தவிர்க்க வேண்டும். குடிசை மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அனுமதித்துள்ள நேரத்தில் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என கலெக்டர் தங்கவேல் அறிவுறுத்தியுள்ளார்.
கரூர் மாநகரத்துக்கு உட்பட்ட பஸ் நிலையத்தின் பின்புறத்தில் இன்று மாலை 6.30 அளவில் திரைப்படம் நடிகர் விமல் நடித்த சார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், திடீரென பொதுமக்கள் ரசிகர் முன்னிலையில் தோன்றி, பொதுமக்களிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டார். விமல் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். நடிகர் விமலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். உற்சாகத்தோடு விடை பெற்றார்.
கரூரில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (https://socialjustice.gov.in) பதிவு செய்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் புகழூரில் அமைந்துள்ள டிஎன்பிஎல் சார்பில், 297ஆவது இலவச மருத்துவ முகாம் அக்.23ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, ஓனவாக்கல் மேடு, நாணப்பரப்பு, கந்தசாமிபாளையம், நல்லியாம்பாளையம், சொட்டையூர், மூலிமங்கலம், பழமாபுரம், மசக்கவுண்டன்புதுார், குறுக்குப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ள டிஎன்பிஎல் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மீட்பு பணியில் ஈடுபட உள்ள பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற கரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், ஊர் காவல் படையினர் மற்றும் மீட்பு உபகரணங்களையும் இன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா கரூர் ஆயுதப்படை மைதானத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.