India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டத்தில் காவல் சார்பு ஆய்வாளர் போட்டித்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 23.04.2025 முதல் நடத்தப்படவுள்ளது. மேலும் <

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8ம் வகுப்பு முதல் டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் .இதற்கு தங்களுடைய சுயவிவர குறிப்பு, உரிய கல்விச்சான்று, ஆதார்அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

மண்மங்கலம் காளிபாளையத்தைச் சோர்ந்த சண்முகசுந்தரம் (40) மனைவி சசிகலா(38) தம்பதியினர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று அதற்கு வட்டி கட்டவில்லை. இதில் நிதி நிறுவனம் மேலாளர் வீரமணி (39) வட்டியோடு சேர்த்து ரூ 46.21 லட்சம் கட்ட வேண்டும் அதற்கு தம்பதியினர் செலுத்த முடியாது என தெரிவித்தனர். இது குறித்து கரூர் டவுன் போலீசில் மேலாளர் அளித்த புகாரின் பேரில் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக முருகன் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

கரூர்: தவுட்டுப்பாளையம் அருகே நஞ்சை புகளூரில் அமைந்துள்ளது காலபைரவர் கோயில். மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

கரூர் வீரர் சீனியர் பிரிவிலான தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு. எதிர் வரும் தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு சீனியர் பிரிவில் தமிழக அணி சார்பாக விளையாட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த M.பிரசாந்த் என்ற வீரர் தேர்வாகியுள்ளார். இவருக்கு கரூர் மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க செயலாளர் Dr.ராஜேந்திரன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கரூர்: புகழூர் மூலிமங்கலம் பிரிவு அருகே நேற்று மெக்கானிக் தனசேகர் காரை ஓட்டி வந்தபோது, கார் மளமளவெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அனணத்தனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை. கரூரில் வெயில் சதம் அடித்து வரும்நிலையில் அடிக்கடி பேட்டரி வாகனங்கள், கார் ஆகியவை தீ பற்றி எரிவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் வெஞ்சமாங்கூடலூர் அருகே பிரசித்தி பெற்ற கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கல்யாண விகிர்தீஸ்வரர், நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தோஷம், புத்திர தோஷம், பெண்களின் சாபம் போன்றவை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

கரூர்- திருச்சி பிரிவில் உள்ள கரூர்-வீரராக்கியம் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில் பாலங்கள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய சேலம்-மயிலாடுதுறை ரெயில் (வண்டி எண்-16812) நாளை மறுநாள் கரூரில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகளம், கையுந்து பந்து, ஜூடோ,கூடைப்பந்து, கபடி மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான இலவச கோடைக்கால பயிற்சி முகாம் ஏப்ரல் 25 முதல் மே 15 வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகட்திற்கு நேரடியாகவோ அல்லது 7401703493 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.
Sorry, no posts matched your criteria.