India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
#சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மார்கழித்திருவிழாவில் மாலை 4 மணிக்கு அஷ்டாபிஷேகம், இரவு 8 மணிக்கு சிதம்பரேஸ்வரர் பவனி, # குருசடி கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் காலை 10 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, #இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை சார்பில் மாலை 5 மணிக்கு தக்கலை அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் “அண்டியாபீசு” நாவல் அறிமுக விழா ஆகியன நடைபெறும்
# காலை 9 மணி – கீரிப்பாறையில் அரசு தோட்ட தொழிலாளர்கள்கோரிக்கைகளை வலியுறுத்தி 41 வது நாளாக போராட்டம் நடக்கிறது. காலை 10 மணி பரக்குன்று சந்திப்பில் நியாய விலை கடையை திறக்க கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. காலை 10 மணி அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் விவேகானந்த கேந்திராவில் கருத்தரங்கம் நடக்கிறது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் இன்று (11.01.2025) காலை 9.30 மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில், மாவட்ட சுற்றுலா துறை சார்பில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அனைவரும் வருகை தந்து நிகழ்ச்சியினை சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், கொலைமிரட்டல் விடும் நோக்கத்துடனோ அல்லது இரு பிரிவினர் இடையே பிரச்சனையை தூண்டும் நோக்கத்துடனோ சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். தனது நண்பரை கொலை செய்தவர்களுக்கு மிரட்டல் விடுத்து பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேற்று (ஜன.10) வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தையொட்டி வருகிற 15ம் தேதி, குடியரசு தினமான வருகிற 26ம் தேதி ஆகிய 2 நாட்களும் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களும் செயல்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் புதிய எஸ்.பி. யாக ஸ்டாலின் பதவி பொறுப்பேற்ற பின்னர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உடனடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி மாவட்டத்தில் ஏற்கனவே புகார் செய்து வழக்கு பதிவு செய்யாமல் இருந்த, புகார் மனுக்களை தூசி தட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள். இதனால் வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
“குமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை (ஜன.,11) முதல் வரும் 20ம் தேதி வரை பத்து நாட்கள் விடுப்பு இல்லாமல் அனைவரும் ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும்; அவசர கால, அத்தியாவசிய விடுப்பு தவிர, பிற விடுப்புகளை தவிர்க்க வேண்டும்” என்று போக்குவரத்து கழக நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பணிபுரிந்து வரும் காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை கண்காணிக்க வேண்டும் என்றும், இது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம். பி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “என்றும் மனதில் நிற்கும் மிக சிறந்த பாடல்களை பாடிய P. ஜெயச்சந்திரன் மறைவு, சோகம் தரும் செய்தி; அவரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்; அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில், தோவாளை கிருஷ்ணன் கோவில், திருப்பதிசாரம் திருவாழி மார்பன் கோவில், சிறமடம் சிறை மீட்ட பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.2.மாலை 5 மணி குளச்சல் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சிபிஎம்எல் லிபரேஷன் ஆர்ப்பாட்டம் நடக்கிறது
Sorry, no posts matched your criteria.