Kanyakumari

News February 3, 2025

குமரியில் 12 கோவில்களில் சிவாலய ஓட்டம்

image

குமரியில் சிவராத்திரியை முன்னிட்டு இம்மாதம் 20ஆம் தேதி சிவாலய ஓட்டம் நடக்கிறது. 108 கிலோமீட்டர் தூரம் ஓடும் இந்த ஓட்டத்தின் போது பக்தர்கள் கையில் விசிறி கொண்டு வீசியவாறு கோவிந்தா கோபாலா என்று கோஷத்துடன் வழிபடுவது வழக்கம். திருமலை சிவன் கோவிலில் இருந்து தொடங்கும் இந்த ஓட்டம் திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பண்ணிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, வழியாக திருநட்டாலும் சென்றடையும்.

News February 3, 2025

பள்ளி,கல்லூரிகள் அருகில் சிகரெட் விற்றால் நடவடிக்கை – எஸ்பி 

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க எஸ்பி ஸ்டாலின் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அவர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள்அருகில் பீடி சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மீறி விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்

News February 2, 2025

பட்ஜெட்டில் குமரி மாவட்டம் புறக்கணிப்பு: விஜய் வசந்த் எம்.பி

image

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “கன்னியாகுமரி பல்வேறு மக்கள் தேவைகள் குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறேன்; மேலும் அமைச்சர்களை நேரில் சந்தித்தும், கடிதம் வாயிலாகவும் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது; ஆனால் அவற்றை குறித்து ஜனாதிபதி உரையில் எதுவும் குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

News February 2, 2025

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

(பிப்ரவரி02) கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வள கனரக வாகனங்களைநிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட, நேரத்தை மீறி வாகனங்களை இயக்கினால் வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், வாகனங்களை அதிவேகத்தில் இயக்கினால் குண்டர் சட்டம் பாயும் எனவும், மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். மேலும் வாகனங்களை 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க அறிவுரை கூறியுள்ளார்.

News February 2, 2025

அதிகாரிகளுக்கு குமரி ஆட்சியர் உத்தரவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக வாகனங்களை காவல்துறை, வருவாய்த்துறை, கனிமவளத்துறை, போக்குவரத்து துறை, வணிகவரித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் கேரள மாநிலத்திற்கு செல்லும் வாகனங்களை தொடர் சோதனை மற்றும் கண்காணிப்பில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று ஆட்சியர் அழகும் மீனா நேற்று அறிவுறுத்தியுள்ளார்.

News February 2, 2025

குமரி : குளங்களில் வண்டல் மண் எடுக்க இலவச அனுமதி

image

மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று (பிப்-1) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.”குமரிமாவட்டத்தில் மண்பாண்டம் செய்பவர்கள், விவசாயம் செய்பவர்கள் ஏரி, குளங்களில் இருந்து தங்களுக்குத் தேவையான கிராவல் மண், களிமண், வண்டல் மண்மண் ஆகியவற்றை இலவசமாக எடுத்துக்கொள்ள இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பயனடையலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

News February 2, 2025

20 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து – குமரி பெண் பலி

image

நேற்று முன்தினம் ஜன-31.ம் தேதி இரவு சென்னையில் இருந்து மார்த்தாண்டம் ஆம்னி பஸ் ஒன்று வந்துகொண்டிருந்தது.நேற்று (பிப்.1) அதிகாலை திருச்சி, துவரங்குறிச்சி அருகே வரும் போது திடீரென பஸ் சாலையோர மின் கம்பத்தில் மோதி பஸ் தீ பிடித்தது. இதில் 15 பேர் படுகாயமடைந்தனர். இதில் மணப்பாறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட களியக்காவிளையைச்சேர்ந்த புஷ்பம்(62) என்பவர் இறந்துபோனார். துவரங்குறிச்சி போலீசார் விசாரணை.

News February 1, 2025

இஸ்ரோ தலைவர் பாராட்டு விழாவில் அமைச்சர் பங்கேற்பு

image

குமரி மாவட்டம் மேலக்காட்டு விளையை சேர்ந்த நாராயணன் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஊர் மக்கள் சார்பில் பாராட்டு விழா நாளை நடைபெறுகிறது. இதற்காக இஸ்ரோ தலைவர் நாராயணன் நாளை (பிப் 2) மேலக்காட்டு விளை வருகிறார். இந்த விழாவில் தமிழக நிதி அமைச்சரும் குமரி பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு கலந்து கொள்கிறார். இந்த விழாவில் ஆட்சியர் அழகு மீனா, எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொள்கிறார்கள்.

News February 1, 2025

பட்ஜெட் குறித்து குமரி எம்.பி அறிக்கை 

image

குமரி எம்.பி விஜய் வசந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழகம் இந்த பட்ஜெட்டில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது; தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை; சில மாநிலங்களுக்கு மட்டும் நிதி மற்றும் திட்டங்களை அளித்து மத்திய அரசு மற்றான் தாய் மனப்பான்மையோடு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது” என எம்பி தெரிவித்துள்ளார்.

News February 1, 2025

குமரி : இஸ்ரோ தலைவருக்கு பாராட்டு விழா

image

இந்திய விண்வெளி துறையின் செயலாளராகவும் மற்றும் இஸ்ரோவின் தலைவராகவும் பொறுப்பேற்று இருக்கும் கன்னியாகுமரி மண்ணின் மைந்தர் வ.நாராயணனுக்கு நாளை (பி.2) ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணி அளவில் அவரது சொந்த ஊரான மேலகாட்டுவிளையில் வைத்து பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!