Kanyakumari

News February 12, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

காலை 11 மணி -தேமுதிக இருபத்தைந்தாவது ஆண்டு கொடி நாளை முன்னிட்டு இரண்டு இடங்களில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்படுகிறது. மாலை 5.30 மணி – நாகராஜா கோவில் 10ம் நாள் திருவிழாவையொட்டி ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.  பகல் 1 மணி – அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டிற்கான ஊதியம் வழங்க கோரி ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி உட்பட 8 கல்லூரிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது

News February 12, 2025

நாகர்கோவிலில் பாலியல் தொழில்; 3 பேர் அதிரடி கைது

image

நாகர்கோவில் ராமன்புதூர் லிட்டில் பிளவர் தெருவில் பாலியல் தொழில் நடைபெறுவதாக மணிகண்டன்(25) என்பவர் புகாரளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாலியல் தொழிலில் ஈடுபட்ட புரோக்கர் கிறிஸ்டி பிரபா(42), நண்பர் கார்த்திகேயன் மற்றும் மற்றொரு பெண்ணை கைது செய்தனர். மரைன் பயிற்சி நிறுவனத்திற்கு என வாடகைக்கு கட்டடம் எடுக்கப்பட்டு அதில் பாலியல் தொழில் நடைபெற்றுள்ளது என விசாரனையில் தெரியவந்துள்ளது

News February 11, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(பிப்.11) காலை 7:30 மணிக்கு நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா கோவில் தைப் பெருந்திருவிழா தேரோட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு மார்த்தாண்டம் காவிரி சந்தை உரக் கிடங்கு பகுதியில் காய்கறி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இடம் ரசீது இல்லாமல் குத்தகை பணம் வசூலிப்பதை கண்டித்து காய்கறி வியாபாரிகள் சார்பில் காய்கறி சந்தை முன்பு சாலை மறியல் போராட்டம் நடக்கிறது.

News February 10, 2025

குமரி அருகே கடைகளுக்கு அபராதம் விதிப்பு 

image

குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரி ராஜேஷ் முன்னிலையில் ஊழியர்கள் மார்த்தாண்டம் வடக்கு தெரு, பல்வேறு பகுதிகளில் பல கடைகளில் இன்று சோதனை செய்தனர் .பிளாஸ்டிக் கவர்கள் இருப்பது, பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. ஐந்து கடைகளுக்கு தலா ரூ.4,000 வீதம் ரூ.20000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News February 10, 2025

தைப்பூசத்தை ஒட்டி சுசீந்திரம் கோவிலில் திருவீதி உலா

image

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோவிலில் நாளை(11-ம் தேதி) தைப்பூசத் திருநாளை முன்னிட்டு காலை 7 மணிக்கு ஸ்ரீ சந்திரசேகர் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும், ஸ்ரீ கௌரி அம்பாள் வெள்ளி அன்னம் வாகனத்திலும் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. தாணுமாலய சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும், அறம் வளர்த்த நாயகிஅம்பாள் வெள்ளி அன்னம் வாகனத்திலும் திருவீதி உலா நடைபெறுகிறது.

News February 10, 2025

நாகர்கோவில் நாகராஜா கோயிலில் நாளை தேரோட்டம்

image

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு நாகராஜா கோயிலில் தை திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இதையொட்டி நாளை(பிப்.11) திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. திருத்தேரில் பாமா ருக்மணி சமேத ஆனந்த கிருஷ்ணன் வலம் வர உள்ளார். நாளை விடுமுறை என்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.

News February 10, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(பிப்.10) காலை 7 மணிக்கு பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தை தேரோட்டம் நடக்கிறது.#காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை முன்பு ESI காப்பீடு திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி 66வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.#காலை 10 மணி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடக்கிறது

News February 9, 2025

விவசாயிகளுக்கு நில விபரங்களுடன் அடையாள எண் 

image

விவசாயிகளுக்கு நில விபரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவு விபர எண் வழங்கும் திட்டம் அரசினால் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆதார் எண் போன்ற ஒவ்வொரு தனித்துவமான “அடையாள எண்” வழங்கப்படும். இனிவரும் காலங்களில் அரசு மானியங்கள் இந்தஎண் மூலம் வழங்கப்படும் என்று குமரி ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்

News February 9, 2025

குமரி மாவட்டத்தில் 47 பேர் மீது வழக்கு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் மது அருந்திக் கொண்டிருந்த 47 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பொது இடத்தில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News February 9, 2025

உரக்கிடங்கு தீ இரண்டு நாட்களில் அணைக்கப்படும் – மேயர் 

image

நாகர்கோவில் வலம்புரி விளை உரக் கிடங்கில் தீ இரண்டு நாட்களில் அணைக்கப்பட்டு விடும் என்று மாநகராட்சி மேயர் மகேஷ் கூறியுள்ளார். தீ அணைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தனியார் வசம் தண்ணீர் டேங்க் இருந்தால் அவற்றை வலம்புரி விளை குப்பை கிடங்கிற்கு கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளோம். மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து தனியார் தண்ணீர் டேங்க் கொண்டுவரப்பட்டு தீயணைக்கப்பட்டு வருகிறது என்றார்.

error: Content is protected !!