India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிடிஎம்புரத்தை சேர்ந்த திவாகர் (65) நேற்று காலை மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.50,000 மற்றும் உண்டியலில் சேமித்திருந்த ரூ.40,000 உட்பட மொத்தம் ரூ.90,000 திருடப்பட்டிருந்தது. சுசீந்திரம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொலையாவட்டத்தில் தற்காப்புகலை பயிற்சி மையம் நடத்தும் கராத்தே மாஸ்டர் ஜெயின்மிலாடு(46) 9.8.2025 அன்று பயிற்சிக்கு வந்த 9-ம் வகுப்பு மாணவியை வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் ஜெயின்மிலாடுவை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று மாவட்ட எஸ்பி பரிந்துரையில் ஆட்சியர் உத்தரவில் ஜெயின்மிலாடுவை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி (German Language Test Training) அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com என்கிற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். இதில், பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வசதி உருவாக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்ட செய்தி குறிப்பில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்டத்தின் கீழ் 341 முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டது. அதன்படி ஜூலை 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை 186 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை 6 முகாம்கள் நடைபெற உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுவினர் (2024-2026) அதன் தலைவர் .வேல்முருகன் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 11.09.2025 (வியாழக்கிழமை) அன்று வருகை தரவுள்ளார்கள். அன்று பிற்பகல் 2 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் குழுவினர் ஆலோசனை நடத்துகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வேகமாக வீசி வருகிறது. இதன் காரணமாக குமாரபுரம், ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, செண்பகராமன் புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காற்றாலைகளில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. 230 கிலோ வாட் மின் உற்பத்தி செய்யும் காற்றாலைகளில் 220 மெகாவாட் வரை மின் உற்பத்தி நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்.13 முதல் டிச.20 வரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். அதன்படி செப்.13 அன்று திருச்சியில் தொடங்கி அக்.10 அன்று நெல்லை, குமரி, திருநெல்வேலியில் மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு கோரி காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 சப்-இன்ஸ்பெக்டர்களை வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டார். அதில் பளுகல், களியக்காவிளை, இரணியல், மணவாளக்குறிச்சி, ஆரல்வாய்மொழி, ராஜாக்கமங்கலம், வெள்ளிச்சந்தை, கீரிப்பாறை, புதுக்கடை, கோட்டார், தெந்தாமரைக்குளம், கருங்கல் உட்பட 14 போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய 14 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குமாரபுரம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த செல்வி மகான் அபிநவ் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அதில் தாயார் செல்வி மாயமான நிலையில் அவருடன் வாழ்ந்து வந்த செல்வ மதன் என்பவர் சிறுவனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. 2 தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் சிறுவனின் உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் உள்ள நிலையில் அதனை வாங்க கடந்த 7 நாட்களாக யாரும் முன் வரவில்லை.

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன்(செப்.8) கால அவகாசம் முடிவடைந்தது. தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அக்கோரிக்கையை ஏற்று இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளை(செப்.10) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. SHARE IT
Sorry, no posts matched your criteria.