Kanyakumari

News October 12, 2025

குமரி: வங்கி வேலைக்கு இன்றே கடைசி

image

குமரி மக்களே, கனரா வங்கி (Canara Bank) 3500 அப்ரண்டிஸ் (Graduate Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் பண்ணுங்க<<>>. விண்ணப்பிக்கெ இன்றே 12.10.2025 கடைசி தேதியாகும். SHARE பண்ணுங்க.

News October 12, 2025

சுசீந்திரம் அருகே டூவிலர், கார் மோதி விபத்து

image

சுசீந்திரம் அருகே ஆசிராமம் பகுதியில் இன்று காலை இருசக்கர வாகனம் மீது அந்த வழியாகச் சென்ற கார் ஒன்று மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்து சென்ற எஸ்.பி. ஸ்டாலின் காயமடைந்தவரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.

News October 12, 2025

மார்த்தாண்டம்: அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு

image

மார்த்தாண்டம் ரெயில்வே நிலையம் அருகில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கிருஷ்ணதாஸ்(73) வீட்டின் கீழ் தளத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று காலை மாடிக்கு சென்றபோது அறைக்கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 பவுன் நெக்லஸ் மாயமாகி இருந்தது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய நபரை தேடி வருகின்றனர்.

News October 12, 2025

குமரி மக்களே இனி அலைச்சல் இல்லை!

image

குமரி மக்களே, உங்களது சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டும். நீங்கள் https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளை பெறலாம். உடனே இத்தகவலை SHARE பண்ணுங்க!

News October 12, 2025

கன்னியாகுமரியில் 25 ரவுடிகள் கைது

image

குமரி மாவட்டத்தில் ரவுடி பட்டியலில் உள்ள ரவுடிகளை கைது செய்ய எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அக்.10 அன்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி செல்வம் என்ற செல்வமுருகனை (39) கன்னியாகுமரி போலீசார் கைது செய்தனர். செல்வம் உட்பட 25 ரவுடிகளை கடந்த 5 நாட்களில் குமரி மாவட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

News October 12, 2025

குமரியில் லஞ்சம் வாங்கிய காவலர் சஸ்பெண்ட்

image

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் பி ஸ்டாலின் சோதனை சாவடிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளை பார்வையிட்டு வருகிறார். அதில் அஞ்சுகிராமம் சோதனை சாவடியில் பணியில் இருந்த காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக அவரை பணி இடை நீக்கம் செய்து எஸ்.பி. = உத்தரவிட்டுள்ளார்.

News October 12, 2025

குமரி: லஞ்சம் வாங்கிய காவலர் பணியிடை நீக்கம்

image

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் பி ஸ்டாலின் சோதனை சாவடிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளை பார்வையிட்டு வருகிறார். அஞ்சுகிராமம் சோதனை சாவடியில் பணியில் இருந்த காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக அவரை பணி இடை நீக்கம் செய்து எஸ்.பி. இன்று உத்தரவிட்டார்.

News October 11, 2025

குடி போதையில் வாகனம்: SP அதிரடி நடவடிக்கை

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசும் போது கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் அதிகமாக உள்ளனர். இதனை கண்டுபிடிக்க சோதனை நடத்துவதற்கு புதிதாக 45 அனலைஸர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News October 11, 2025

குமரி: G.H ல் இவை எல்லாம் இலவசம்!

image

குமரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் குமரி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04652-275089 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க..

News October 11, 2025

கன்னியாகுமரி: கிராம ஊராட்சி செயலாளர் காலி பணியிடங்கள்

image

கன்னியாகுமரி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் இனசுழற்சி மூலம் பூர்த்தி செய்ய 30 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான விவரங்கள் www.tnrd.gov.in என்ற இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது. இணையதள முகவரியில் இன்று முதல் (அக்.10) விண்ணப்பிக்கலாம். (விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 09.11.2025) *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!