Kanyakumari

News April 1, 2025

கன்னியாகுமரியில் சுங்க கட்டண உயர்வு 

image

 திருப்பதி சாரத்தில் உள்ள  சுங்கச்சாவடியில் திருத்தி அமைக்கப்பட்ட புதிய கட்டண உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. அதன்படி கார் ஜீப்,வேன்,லகுரக வாகனம் ஒரு வழி பயணத்திற்கு 40-ல் இருந்து 45 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மாதாந்திர கடவுச்சீட்டு கட்டணம் 1410 ரூபாயில் இருந்து 1460 ரூபாயாக மாற்றம். மாவட்ட எல்லைக்குள் வணிக வாகனங்களுக்கு ரூ.20 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News April 1, 2025

வில்லுக்குறி ஆற்றங்கரையில் கிடந்த சடலம் 

image

வில்லுக்குறி  ஆற்றின் கரையில்  உடல்  அழுகிய நிலையில்கண்டறியப்பட்டது. இரணியல் போலீசார் உடனடியாக அந்த உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணை செய்ததில் அவர் மாடத்தட்டு விளை பகுதியை சேர்ந்த ஆல்வின் என தெரிய வந்தது.மீனவரான இவர் கடந்த 25ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில்,இவரின் இறப்பு குறித்து இரணியல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News March 31, 2025

குமரியில் வேலைத் தேடுவோருக்கு நல்ல வாய்ப்பு

image

குமரி, சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரியில் வரும் ஏப்.,12 அன்று வசந்த்&கோ சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதற்கான முன்பதிவு ஏப்.,2- 8 வரை நடைபெறும். 10, +2, டிப்ளமோ, டிகிரி படித்த அனைவரும் இதில் பங்கேற்று முன்னணி நிறுவனங்களின் வேலைவாய்ப்பை பெற முயற்சிக்கலாம் என குமரி எம்.பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். *நல்ல வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க. நண்பர்களுக்கும் பகிருங்கள்*

News March 31, 2025

விவேகானந்தர் மண்டபத்தில் காவிக்கொடி அகற்றம் இல்லை

image

குமரி, விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் முகப்பில் காவி கொடிபறக்க விடப்பட்டுள்ளது. இந்தக் கொடி தினமும் சூரியன் உதயமாகும்போது ஏற்றப்பட்டு, சூரியன்மறையும் போது இறக்கப்படுவது வழக்கம். இந்த கொடி கம்பத்தை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் கேந்திர நிர்வாகத்துக்கு நோட்டீஸ்அனுப்பியது. இதில் தளவாய் சுந்தரம் MLA தலையிட்டு மாவட்ட நிர்வாகத்துடன் பேசி கொடியை அகற்றும் முயற்சியை தடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 31, 2025

குமரி ஆட்சியர் வெளியிட்ட புது தகவல்

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “குமரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மொத்தம் 17 இயக்கப்பட்டு வருகிறது. இதில் 12 அடிப்படை உயிர் காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள், 4 அதி நவீன உயிர் காக்கும் வசதி கொண்ட ஆம்புலன்ஸ்கள், 1 பச்சிளம் குழந்தைக்கு உண்டான ஆம்புலன்ஸ் உள்ளன. மேலும், கடந்த ஆண்டு 25,279 பொதுமக்கள் ஆம்புலன்ஸ் சேவையில் பயன் பெற்றுள்ளனர்” என கூறியுள்ளார்.

News March 31, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர்மட்ட விபரம்

image

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச்.31) 29.01 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.55 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.72 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 31 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 27 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

News March 31, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க கோரி காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் கூட்டமைப்பு 108 வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. மாலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி விவேகானந்தா கேந்திரா வந்தடைந்து நிறைவு விழா நடைபெற உள்ளது.

News March 31, 2025

கன்னியாகுமரி: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் பகிரவும்.

News March 31, 2025

குமரியில் புகார் தெரிவிக்க எண் வெளியீடு

image

குமரி மாவட்டத்தில் கஞ்சா, திருட்டு, கந்துவட்டி உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கந்துவட்டி வழக்குகள் தற்போது இல்லை. இது தொடர்பாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி நிறுவனங்களில் புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் இருந்தால் பொதுமக்கள் 7010363173 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மாவட்ட சூப்பிரண்டு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News March 30, 2025

குமரியில் பைக் சாகசம் செய்தால் கடும் நடவடிக்கை

image

குமரியில் சமீபகாலமாக இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபடும் சம்பவம் அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போலீசாரின் எச்சரிக்கையை மீறி மக்களை அச்சுறுத்தம் வகையில் பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதிவேகமாக செல்லும் நபர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் எச்சரித்துள்ளார். *சாகசம் செய்வோருக்கு பகிர்ந்து அறிவுரை கூறுங்கள்*

error: Content is protected !!