India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
TN-Alert App பொதுமக்களுக்கு வெப்பநிலை, மழை போன்ற வானிலை முன்னறிவிப்புகளை தமிழில் வழங்குகிறது. இதில் நான்கு நாட்களுக்கு முன்பான வானிலை அறிக்கைகள், தினசரி மழை அளவுகள், நீர்த்தேக்க நிலை மற்றும் வெள்ள அபாயம் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம். பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான மக்கள் புகார்களை பதிவு செய்யவும்,மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இந்த செயலி உதவுகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது சமூகத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறும் நேரத்தை ஆராய்ந்து பார்க்கின்ற போது குறிப்பாக மதிய வேளையில் 1 முதல் 5 மணி வரை உள்ள வேளையில் நடைபெறுகிறது என்ற குறிப்பு தெரிய வந்துள்ளதால் போலீசார் இந்த நேரத்தில் அதிக விழிப்புடன் செயல்பட வேண்டும். ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என குமரி எஸ்.பி சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் போலிசார் நீதிமன்றம் அழைத்து சென்ற போது சந்துரு என்ற திருடன் தப்பி ஓடினான். இது சம்பந்தமாக இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். WANTED NOTICE மூலமாக திருடனை தேடி வந்த நிலையில் கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் சுந்தர்மூர்த்தி திருடனை பிடித்தார். அவருக்கு ராமேஸ்வரம் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி, தனி ஆர்.ஐ மைக்கேல் சுந்தர்ராஜ் ஆகியோர் ஐரேனிபுரம் பகுதியில் இன்று (அக்.24) வாகன தணிக்கையின் போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்த முற்பட்டபோது நிறுத்தாமல் சென்றது. துரத்திச் சென்ற போது காரை சென்னி தோட்டம் பகுதியில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடினார். காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2200 கிலோ ரேஷன் அரிசியும் காரும் பறிமுதல் செய்யபட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நாளை (அக்.25) மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். மழை காரணமாக நாளை மாவட்டத்தில் பள்ளிகள் செயல்படாது.
குமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஏசு.ராஜசேகரன் 30க்கும் மேற்பட்டவர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1.47 கோடி மோசடி செய்ததாக பெண் ஒருவர் இரண்டு தினங்களுக்கு முன் புகார் அளித்திருந்தார். சுந்தரவதனம் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் ஏசு.ராஜசேகரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டி.ஜ.ஜி உத்தரவு.
குமரி மாவட்டத்தில் மாணவர்களுக்கு போதைப்பொருள்கள் கிடைப்பதை தடுக்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஊராட்சிகளில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை முழுமையாக சென்றடையவில்லை. எனவே, ஊராட்சி பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று கூறினார்.
தீபாவளி பண்டிகை குறித்து நாகர்கோவில் தீயணைப்பு துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், பட்டாசுகளை டப்பா அல்லது வேறு பொருட்களால் மூடி வெடிக்கக்கூடாது. தீக்காயம் ஏற்பட்டால் உடனே காயத்தில் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். வீட்டின் மாடியில் பட்டாசு வெடிக்கக்கூடாது. சிறுவர்கள் கையில் பட்டாசுகளை எடுத்து விளையாட கூடாது. வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க முயற்சி செய்யக் கூடாது என கூறப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பெருமாள் நகரை சேர்ந்தவர் விவேக். இவர், தனக்கு சொந்தமான காரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இந்நிலையில், விவேக்கின் அண்ணன் விக்னேஷ், நேற்று(அக்.,23) இரவு காருக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். சொத்து தகராறில் காருக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குமரி மாவட்ட பொது விநியோக திட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ரேசன் பொருட்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று(அக்.,23) காலை தஞ்சாவூரில் இருந்து 1,350 டன் ரேசன் அரிசி மூடைகள் ரயில் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. சரக்கு ரயிலில் 35 வேகன்களில் இந்த அரிசி வந்தது. பின்னர் லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
Sorry, no posts matched your criteria.