India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரியில் நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்பித்து வந்த நிலையில், வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல்,விண்ணப்பிக்க https://tamilnilam.tn.gov.in/citizen புதிய வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய விண்ணப்பம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
குமரி மாவட்டம் நாகர்கோவில் – தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயில் சேவையினை ( வண்டி எண். 06012, மற்றும் வண்டி எண். 06011 )கோடை விடுமுறையை முன்னிட்டு மேலும் ஒரு மாதம் தெற்கு ரயில்வே நீட்டிப்பு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு நேற்று வெளியாகி உள்ளது. இதனால் கோடை விடுமுறையை கழிக்க செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமானது நாளை(16.04.2025) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. இதில் 30க்கும் அதிகமான, புகழ்மிக்க நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவைப்படும் தகுந்த நபர்களை வேலைக்கு தேர்வு செய்ய இருக்கிறார்கள் என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
திருச்சூர் எம்.பியும் மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் மற்றும் நடிகருமான சுரேஷ்கோபி இன்று குடும்பத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
1956 ஆம் ஆண்டு கன்னியாகுமரி, திருவிதாங்கூரில் இருந்து தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது இங்குள்ள உணவு வகைகள் கேரள உணவு வகைகளை ஒத்திருக்கும். அதில் சிறந்தவைகள் :
▶️கப்பா
▶️ரச வடை
▶️சத்யா
▶️அவல் (வெட்டன் ரைஸ்)
▶️அவியல்
▶️முந்திரி கொத்து
▶️வாழை சிப்ஸ்
▶️பழ பஜ்ஜி
▶️பலாப்பழ சிப்ஸ்
▶️ஆயினி சக்கை *ஷேர் பண்ணுங்க (உங்களுக்கு தெரிந்த உணவுகளை குறிப்பிடலாம்)
குமரி மக்களே கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க இந்த பானங்களை மட்டும் அருந்துங்கள். இளநீர், மோர், பானகம், தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொண்டால் உடல் நீர்ச்சத்தோடு ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாமல் உடலுக்கு கேடு விளைவிக்கும் குளிர் பானங்களை அருந்த வேண்டாம். ஷேர் பண்ணுங்க.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 771 சேமிப்பு கணக்குகள் தபால் நிலையங்கள் மூலமாக தொடங்கப்பட்டுள்ளது. அடல் பென்ஷன் திட்டம், பிரதம மந்திரி ஜீவன் ஜோதி திட்டம் உள்ளிட்ட காப்பீட்டு திட்டங்களில் 8394 சேமிப்பு கணக்குகளை வாடிக்கையாளர்கள் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
நாகர்கோவில் அருகே தாமரைக் குட்டி விளையை சேர்ந்தவர் கண்ணன். இவர் இரும்பு மனிதன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தனது நண்பருடன் உடற்பயிற்சி மேற்கொண்ட சமூக வலைதளங்களில் இது பரவியது. இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படையினர் இன்று (ஏப்.15) கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று (ஏப்.15) 30.91அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 28.50 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.89 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.98 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 132 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 84 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
Sorry, no posts matched your criteria.