Kanyakumari

News October 17, 2024

குமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது

image

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 373 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 193 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 547 கன அடியும் பெருஞ்சாணி அணையில் இருந்து 160 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 505 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 267 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

News October 17, 2024

கன்னியாகுமரி மாவட்ட திட்டக்குழு கூட்டம் அறிவிப்பு

image

குமரி மாவட்ட திட்டக்குழுவின் கூட்டம் அக்டோபர் 23ம் தேதி காலை 11.30 மணிக்கு நாகர்கோவில் வருவாய் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இதில், கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரை நீர்வழி பாதை அமைத்து சுற்றுலாத்துறை மூலம் படகு சவாரி போக்குவரத்து அமைப்பது, நீராதாரங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைப்புகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளதாக தலைவர் மெர்லியன்ட் தாஸ் தெரிவித்தார்.

News October 17, 2024

குமரியில் ரேப்பிட் ரெஸ்பான்ஸ் டீம்

image

கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது,“குமரி 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் அமைக்கப்பட்டுள்ள ரேப்பிட் ரெஸ்பான்ஸ் டீமில் உள்ள கால்நடை மருத்துவப்பிரிவை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்தலாம்; அவரச தேவைக்கு 1962 எண்ணில் அழைத்தால் கால்நடை இருப்பிடம் வந்து கால்நடைக்கு சிகிச்சை அளிக்கப்படும்” என்றார்

News October 17, 2024

குமரி மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “குமரி மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் கடற்கரைப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்; இது போன்ற காலங்களில்  நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

News October 17, 2024

உஷார் நிலையில் இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

image

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கும் நிலை இருந்து வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் 24 மணி நேரமும் உஷாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று அறிவுறுத்தியுள்ளார்.

News October 17, 2024

குமரி மாவட்ட மழை நிலவரம் அறிவிப்பு

image

குமரி மாவட்டத்தில் பரவலாக மலையோர பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதன்படி, சுருளோட்டில் 29.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பாலமோரில் 22.4, கல்லாரில் 20, தடிக்காரன் கோணம் 19.6, பூதப்பாண்டி 15.2, பெருஞ்சாணி 11, புத்தன் அணை 9.6, செண்பகராமன் புதூர் 8.4, முக்கடல் அணை 8.4, கோதையாிரல் 8 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது இது தவிர அடையாமடை, பேச்சிப்பாறை, ஆரல்வாய்மொழி, தோவாளை உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்துள்ளது.

News October 16, 2024

அதிமுக மீனவரணி இணை செயலாளர் அறிக்கை

image

அதிமுக மீனவரணி இணை செயலாளர் பசலியா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் தாது மணல் எடுக்க கருத்து கேட்பு கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது; அதனை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்; மீனவர் விரோதத் திட்டங்களை தமிழக அரசு அனுமதித்தால் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்” என குறிப்பிட்டுள்ளார். 

News October 16, 2024

குமரி கடலில் இறங்கிய சுற்றுலா பயணிகளை விரட்டிய போலீஸ்

image

குமரி மாவட்ட கடல் பகுதியில் சீற்றம் அதிகமாக உள்ளதால் குமரிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளை கடலில் இறங்க போலீசார் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் ஒரு சில சுற்றுலாப் பயணிகள் போலீஸ் காவலையும் மீறி கடலில் இறங்கியநிலையில் அவர்களை போலீசார் அங்கிருந்து விரட்டி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News October 16, 2024

குமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க திடீர் தடை

image

குமரி கடலில் இன்று(அக்.,16) காலை கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக கரையை நோக்கி வந்து வீசிவிட்டு சென்றன. இந்த ராட்சத அலையினால் கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா போலீசார் கடற்கரை பகுதியை சுற்றி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

News October 16, 2024

தீபாவளி: சென்னை to நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் to நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் விருதாச்சலம், திருச்சி, மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக நாகர்கோவில் வந்து சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து இதே வழியில் சென்னை சென்ட்ரலுக்கு ரயில் புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!