Kanyakumari

News March 28, 2025

குமரி பெண் பிள்ளைகளின் பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு

image

குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்,’ஆண்டுக்கு அதிகபட்சமாக 7.5% வட்டி வழங்கும் மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதுவரை இத்திட்டத்தில் 13,000 பேர் கணக்கு தொடங்கியுள்ளனர். பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என கூறியுள்ளார். *நல்ல வாய்பை மிஸ் பண்ணிடாதீங்க* ஷேர்

News March 28, 2025

நாகர்கோவிலில் ஏப்.1ல் வேளாண்மை கருத்தரங்கு

image

வளரும் வேளாண்மை – கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா சார்பில் வேளாண்மை கருத்தரங்கம் மற்றும் ஆண்டு மலர் வெளியீடு நிகழ்ச்சி ஏப்ரல் 1ஆம் தேதி நாகர்கோவில் கஸ்தூரிபா மாதர் சங்கத்தில் நடைபெறுகிறது. ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி ராஜ்குமார் தலைமை வகிக்கிறார். நிர்வாக குழு உறுப்பினர் லட்சுமி தங்கம், கவுன்சில் உறுப்பினர் அனிதா நடராஜன், ஓய்வுபெற்ற கூடுதல் இயக்குநர் நிஜமுதீன் கண்ணன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

News March 28, 2025

பொன் ராதாகிருஷ்ணன் ‘X’ கணக்கு ஹேக்!

image

முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான பொன் ராதாகிருஷ்ணன் ‘X’ கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக இன்று(மார்ச் 28) அவர் தகவல் வெளியிட்டுள்ளார். அதனை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதா கிருஷ்ணனின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News March 28, 2025

குமரி அணைகளின் இன்றைய நீர்மட்டம் விவரம்

image

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 28) 28.93 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.70 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.72 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 51 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 27 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

News March 28, 2025

குமரி மாவட்டத்தின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(மார்ச் 28) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க கோரி கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை முன்பு 106வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு வன உரிமைகள் சட்டம் வென்றெடுக்கும் காணி மக்களின் 4வது மாநில மாநாடு பேச்சிப் பாறையில் நடைபெறுகிறது.

News March 28, 2025

த.வெ.க.விற்கு விஜயதாரணி மறைமுக அழைப்பு?

image

குமரி மாவட்ட விளவங்கோடு முன்னாள் எம்எல்ஏவும், தமிழக பாஜக நிர்வாகியுமான விஜயதாரணி கரூரில் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து போட்டியிட்டால் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்றும். திமுக மீது அதிருப்தி தெரிவித்து வரும் த.வெ.க எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டால் ஆட்சியில் பங்கு பெறலாம். இல்லையென்றால் ஓட்டுகளை பிரிக்கும் கட்சியாக இருக்கும் என கூறினார். 

News March 28, 2025

குமரியில் 22,000 பேர் 10th பொதுத்தேர்வு எழுதுகின்றனர்

image

தமிழ்நாட்டில் இன்று(மார்ச் 28) 10th பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. குமரியில் 122 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 22 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 234 பள்ளிகளுக்கு 66 மையங்களும், 4 தனித்தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 21 பள்ளிகளுக்கு 49 மையங்களும் 3 தனித்தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க!

News March 28, 2025

கன்னியாகுமரி மக்களே.. ரயில் ரத்து அறிவிப்பு

image

மங்களூர் – கன்னியாகுமரி பரசுராம் விரைவு ரயில் (வண்டி எண் 16649) மார்ச் 28 அன்றும் கன்னியாகுமரி – மங்களூர் பரசுராம் விரைவு ரயில் (வண்டி எண் 16650) திருவனந்தபுரம் – கன்னியாகுமரி இடையே மார்ச் 29 அன்றும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று தென்னக ரயில்வே சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

News March 28, 2025

குமரியில் 22000 பேர் தேர்வு எழுதுகின்றனர்

image

இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளது. குமரி மாவட்டத்தில் 122 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை 22 ஆயிரம் மாணவ மாணவியர்கள் எழுத உள்ளனர். மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 234 பள்ளிகளுக்கு 66 தேர்வு மையங்களும் நான்கு தனித்தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 21 பள்ளிகளுக்கு 49 மையங்களும் மூன்று தனி தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

News March 28, 2025

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கலக்டர் வாழ்த்து

image

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை 28.3.2025 முதல் 15.04.2025 வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் 22,022 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். தேர்வு நடைபெறும் மையங்களில் சிறப்பான முறையில் அனைத்து மாணவர்களும் தேர்வை தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும், படித்ததை நினைவுடன் எழுத கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

error: Content is protected !!