Kanyakumari

News November 6, 2024

குமரி வெங்கடாஜலபதி கோவிலுக்கு 6500 திருப்பதி லட்டு வருகை

image

கன்னியாகுமரி விவேகானந்தபுரம் கடற்கரையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இன்று கோவிலுக்கு திருப்பதியில் இருந்து 6500 லட்டு வந்துள்ளது. இதில் கடந்த 2 நாட்களில் 4 ஆயிரம் லட்டு விற்பனை ஆகி உள்ளது. இன்னும் 2 ஆயிரத்து 500 லட்டு விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 6, 2024

கன்னிவெடி வெடித்து பசுமாடு வாய் சிதறியது

image

ஆரல்வாய்மொழி பொய்கை அணை அருகே கன்னிவெடி வெடித்ததில் பசு மாடு வாய் சிதறி காயமடைந்துள்ளது. அந்தப் பகுதியில் காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்காக சிலர் வெடிகள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் உள்ள வெடி வெடித்து பசு மாட்டிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பெயரில் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News November 6, 2024

கேரளாவுக்கு கடத்தல் முயன்ற 400 கிலோ அரிசி பறிமுதல்

image

குமரி அருகே கோவளத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கன்னியாகுமரி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்திக் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இது தொடர்ந்து அந்த காரையும் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் இருந்த அஜின், சிஜின் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

News November 5, 2024

தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு குமரி வருகை

image

தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு அதன் தலைவர் காந்திராஜன் எம். எல்.ஏ.தலைமையில் தூத்துக்குடியில் இருந்து இன்று கன்னியாகுமரி வந்தனர். இந்த குழுவில் 12 எம்எல்ஏக்கள் மற்றும் சட்டமன்ற அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். குமரி மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்ரமணியம், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. காளீஸ்வரி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இந்த குழுவினர் நாளை பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்கள்.

News November 5, 2024

குமரியில் 2 வன ஊழியர்கள் சஸ்பெண்ட் 

image

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வன பாதுகாப்பாளர் அலுவலகத்தில் ரூ.10000 லஞ்சம் வாங்கி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட பால்ராஜை மாவட்ட வனப் பாதுகாவலர் பிரசாந்த் இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் பறவை பாதுகாவலர் இந்திரன் பணி நேரத்தில் அலுவலகத்தில் வந்து அமர்ந்திருந்ததால் அவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News November 5, 2024

 சட்டமன்ற குழுவிடம் பொதுமக்கள் மனு அளிக்கலாம்

image

தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு காந்திராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் இன்று (நவ.5) இரவு கன்னியாகுமரி வருகிறது. இந்தக் குழுவினர் நாளை குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார்கள். அப்போது இந்த குழுவினரை பொதுமக்கள் சந்தித்து தங்களது பகுதியில் உள்ள குறைகளை மனுக்களாக அளிக்கலாம் என குமரி ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

News November 5, 2024

வனத்துறை காவலர் பணியிடை நீக்கம்

image

கன்னியாகுமரி வனக்கோட்டம், பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட அரசு மரமண்டி, வடசேரியில் பணிபுரிபவர் மிகைப்பணியிட காவலர் எஸ்.பால்ராஜ். இவர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர், ஆணையின் படி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தகவலை செய்திமக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ளது.

News November 5, 2024

 தனியார் விடுதிகளுக்கு எஸ்.பி எச்சரிக்கை

image

கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் செயல்பட்டு வரும் தனியார் விடுதிகள், மசாஜ் சென்டர்கள் சட்டத்திற்கு புறம்பாக பாலியல் தொழிலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், காவல்துறையின் தனி குழு கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருவதாகவும் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.

News November 5, 2024

சாதனை புரிந்த பெண் குழந்தைகளுக்கு விருது – ஆட்சியர் 

image

பெண்குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பெண் குழந்தை முன்னேற்றத்திற்காக பாடுபட்டு சாதனை புரிந்த பெண் குழந்தைக்கான மாநில அரசு விருது குமரி மாவட்டத்தில் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதில் தகுதியானவர்கள்  மாநில அரசின் விருது பெற 21.12.2024 க்குள் தமிழக அரசின் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டுமென ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

News November 5, 2024

ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வன அலுவலக ஊழியர் கைது

image

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்தில் கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு நடத்தினர். இதில் ரூ.10000 லஞ்சம் வாங்கிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.