Kanyakumari

News May 16, 2024

குமரி மாவட்ட அணைகளில் நீர் இருப்பு

image

கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு:- 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 9.94, 10.04 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 44. 91 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 47 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 0.2 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.5 அடி நீரும் இருப்பு உள்ளது.

News May 16, 2024

குமரியில் குளு குளு சீசன்

image

கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்த நிலையில், குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. மாவட்டம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக குளு, குளு சீசன் நிலவுகிறது. குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

News May 15, 2024

மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்

image

குமரி மாவட்டத்தில் 15.05.2024 முதல் 17.05.2024 ஆகிய நாட்களுக்கு மிதமான மழையும்.18.05.2024 மற்றும் 19.05.2024 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை இருக்கும் அதனால் பொதுமக்கள் கடலோரப் பகுதிகள், ஆற்று ஓரங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் மின்சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News May 15, 2024

குமரி: 19 ஆம் தேதி வரை மழை பெய்யும்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து உயிர் சேதம் ஏற்படாதவாறு அணை கட்டு மற்றும் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News May 15, 2024

குமரி : நாளை கனமழைக்கு வாய்ப்பு.

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 15, 2024

குமரி: இரு நாட்களுக்கு எச்சரிக்கை

image

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்றும் நாளையும் (மே.15 & 16) கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடுவதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

News May 15, 2024

கன்னியாகுமரி மழைப்பொழிவு விவரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திற்பரப்பு பகுஹ்டியில் 5 செ.மீட்டரும், களியல் பகுதியில் 3 செ.மீட்டரும், பேச்சிப்பாறை, சிற்றாறு – 1, இரணியல், பாலமோர், அடையாமடை, முக்கடல் அணை ஆகிய பகுதிகள் 1 செ.மீட்டர் அளவு மழைப்பொழிவு பதிவானது.

News May 15, 2024

நான் முதல்வன் திட்டத்தில் 57,318 மாணாக்கர்கள் பயன்

image

தமிழ்நாட்டின் மாணவ, மாணவிகளின் திறமைகளை ஊக்குவிக்குகின்ற நான் முதல்வன்
திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு
பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் பொறியியல்
கல்லூரிகளில் 22,798 நபர்களும், கலை, அறிவியல் கல்லூரிகளில்
27,795 பேரும் தொழில்நுட்ப கல்லூரிகளில் 6,725 பேர் என மொத்தம் 57,318 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் தெரிவித்தார். 

News May 15, 2024

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த குமரி எம்.பி

image

தமிழ் நாட்டில் தனியார் நிலங்களில் கட்டப்பட்டுள்ள அனைத்து மதங்களை சேர்ந்த வழிபாட்டு தலங்களை செப்பனிடுவதற்கும் சீரமைப்பதற்கும் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெற தேவை இல்லை என மே-7 தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. ஆணை பிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருக்கு விஜய் வசந்த் எம்.பி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

News May 15, 2024

குமரி: கனமழைக்கு வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.