India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் தென்னக ரயில்வேயில் பொது மேலாளர் மற்றும் முதன்மை செயல் மேலாளர் ஆகியோரை நேற்று (நவ. 20) கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்தார். அப்போது, கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேரடி ரயில் சேவை வேண்டும் மற்றும் நாகர்கோவில் திருவனந்தபுரம் மெமு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நாளை (நவ.21) காலை 8.30 மணிக்கு கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் அவருக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அவர் 10 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இணைப்பு கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார்.
குமரி கிழக்கு மாவட்ட அதிமுக கள ஆய்வு குழு ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான வேலுமணி, அருணாசலம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, வார்டு நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூராட்சி, ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தளவாய் சுந்தரம் எம்எல்ஏ இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் குமரி உட்பட நாகை, நெல்லை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.20) கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குமரி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு மழை எச்சரிக்கை இன்று விடுத்துள்ளது. அதில், மழைக்காலத்தில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் பயணம் செய்யும்போது மெதுவாகவும், கவனமாகவும் செல்ல வேண்டும். தண்ணீர் சூழ்ந்த இடங்களில் சென்று செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். மின்கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெள்ளம் சம்மந்தப்பட்ட பொதுமக்களை பயமுறுத்தும் தேவையற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்.
தமிழக முதல்வரின் ‘உங்களை தேடி உங்கள் ஊர்’ திட்டத்தின் படி இன்று, திருவட்டார் தாலுகா பகுதிகளில் குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஆய்வு மேற்கொள்கிறார். காலை 9 மணிக்கு திருவட்டார் உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். அங்கு மாணவ மாணவிகளிடம் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், டி.வி, மொபைல் போன்ற கருவிகளில் பொழுதை போக்கக்கூடாது என அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் சொந்த வீடற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்களது நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள குமாரபுரத்தில் 288 கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று(நவம்பர் 20) கடலில் பயணம் செய்து விவேகானந்தர் பாறைக்கு செல்லும் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மழை நின்ற பிறகு படகு சேவை தொடரும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பெண் சிசுக்கொலையை தடுக்க உருவான “முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு” திட்டத்தில் 2021-22ம் ஆண்டில் 1,948 பேரும், 2022-23ல் 2,242 பேரும், 2023-24ல் 1,771 பேரும், 2024-25.ல் இதுவரை 475 பேர் என மொத்தம் 6,436 பெண் குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ.16.10 கோடி மதிப்பில் வைப்புத்தொகை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மாவட்ட அதிகாரி விஜய மீனா தெரிவித்துள்ளார்.
#கொல்லமாவடி முத்தாரம்மன் கோயிலில் காலை 11 மணிக்கு கலச பூஜை, மாலை 6-க்கு பகவதி சேவை, இரவு 8-க்கு வாஸ்து ஹோமம் நடைபெறுகிறது. #காமச்சன் பரப்பு பெருமாள் கோயிலில் காலை 9 மணிக்கு தோட்டுக்காரி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபாபிஷேகம். #கிண்ணிக்கண்ணன்விளை சடச்சி பதியில் மாலை 6 மணிக்கு பணிவிடை, திருஏடுவாசிப்பு. #மார்த்தாண்டம் கிறிஸ்து அரசல் ஆலயத்தில் மாலை 6.45 மணிக்கு நற்செய்தி கூட்டம்.
Sorry, no posts matched your criteria.