Kanyakumari

News November 22, 2024

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 25 ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் கலந்துகொள்கிறார்கள். கூட்டத்தில் மாவட்ட முகவரிப் பட்டியலிலுள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், எரிவாயு நுகர்வோர்கள் கலந்துகொண்டு எரிவாயு விநியோக குறைகளை கூறலாம்.

News November 22, 2024

பிறப்பு இறப்பு சான்றிதழில் ஒரு முறை மட்டுமே திருத்தம்!

image

குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மருத்துவமனை அலுவலர்கள் மற்றும் மருத்துவமனைகளில் பிறப்பு, இறப்பு பதிவு செய்யும் ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம் நகராட்சி தலைவர் பொன் ஆசை தம்பித் தலைமையில், ஆணையாளர் ராஜேஸ்வரன் முன்னிலையில் நேற்று(நவ.,21) நடைபெற்றது. கூட்டத்தில், புதிய சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் பிறப்பு, இறப்பு சான்றிதழில் ஒருமுறை மட்டுமே திருத்தம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.

News November 22, 2024

குமரி நெல் சாகுபடி பணியில் வட மாநில இளைஞர்கள்

image

குமரி மாவட்டத்தில் தற்போது பல வட மாநில இளைஞர்கள் வயலில் நாற்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேலையும் நேர்த்தியாக உள்ளதாக கூறுகின்றனர். செண்பகராமன் புதூர், கண்ணன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் நாற்று நடவு பணி செய்து வருகின்றனர். 4.75 சென்ட் பரப்பளவில் நாற்று நடவு செய்வதற்கு ரூ.240 கூலியாக வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கர் நாற்று நடவுக்கு கூலியாக ரூ.5 ஆயிரம் பெற்று வருகின்றனர்.

News November 22, 2024

இன்ஸ்பெக்டர், SI துப்பாக்கி வைத்திருக்க வேண்டும்: குமரி SP

image

குமரி மாவட்ட SP சுந்தரவதனம் நேற்று(நவ.,21) கூறியதாவது, பணியில் இருக்கும் போலீசாரை குடிபோதையிலிருப்பவர் தாக்கும் சம்பவம், போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் குற்றவாளிகள் தப்பிக்கும் நிகழ்வு ஆகியவை தொடர்ந்து நடைபெறுகின்றன. பணியில் இருக்கும் இன்ஸ்பெக்ட்ர், SI கண்டிப்பாக கைதுப்பாக்கி வைத்திருக்க வேண்டும். கைத்துப்பாக்கி வைத்திருக்கும்போது அவர்களுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்றார்.

News November 22, 2024

குமரி சாலைகளை பராமரிக்க ரூ.226 கோடி ஒதுக்கீடு: அமைச்சர்

image

நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று குமரியில் கூறியதாவது, கன்னியாகுமரியில் 1,343 கி.மீ நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் 237 கி.மீ நீளமுள்ள 177 சாலை பணிகள் ரூ.226 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு, 163 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 14 பணிகள் நடைபெற்று வருகின்றன. 6 பாலப்பணிகள் ரூ.11 கோடி மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு 3 பணிகள் நிறைவு பெற்றுள்ளன என்றார்.

News November 22, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கண்ணன் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து குமரி மாவட்டத்தில் இன்று(நவ.,22) 2வது நாளாக வழக்கறிஞர்கள் நாகர்கோவில், பூதப்பாண்டி, பத்மநாபபுரம், இரணியல் மற்றும் குழித்துறை நீதிமன்றங்கள் புறக்கணிப்பு. #மாலை 5.30 மணிக்கு கப்பியறை பேரூராட்சி பணியாளர் ராபியை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரூராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

News November 21, 2024

காளிகேசம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி..!

image

கன்னியாகுமரி மாவட்டம் காளிகேசம் பகுதிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையால் காளிகேசம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. தற்போது வெள்ளம் குறைந்து நீர்வரத்து சீரானதை அடுத்து காளிகேசம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதித்துள்ளது.

News November 21, 2024

குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்

image

குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு:-18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 14.76மற்றும் 14.86.அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 42. 4அடி நீரும்,77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணியில் 64.47அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்டல் அணையில் 25 அடி நீரும், 42.65அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.4அடி நீரும் இருப்பு உள்ளது.

News November 21, 2024

குமரி விபத்தில் ஒருவர் பலி- ஒருவர் படுகாயம்

image

குமரி அருகே 4 வழிச்சாலையில் இன்று இருசக்கர வாகனத்தில் பரவூரைச் சேர்ந்த இருவர் நிலை தடுமாறி சாலையோர தடுப்பில் மோதியுள்ளனர். இதில் இருவரும் உயிரிழந்ததாக கூறப்பட்டநிலையில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News November 21, 2024

குமரியில் அவசர உதவி எண்கள் எஸ்பி அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள மீட்புப் பணிகளில் பொது மக்களுக்கு உதவுவதற்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 அல்லது 7010363173 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தர வதனம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!