Kanyakumari

News November 23, 2024

குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை!

image

இன்று உருவாக உள்ள காற்றழுத்து தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலிமை பெறும் வாய்ப்பு உள்ளதால், கன்னியாகுமரி மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை பகுதி மற்றும் அரபிக் கடல் பகுதியில் வரும் திங்கட்கிழமை(நவ.,25) முதல் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. இதனால் திங்கட்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News November 23, 2024

குமரியில் இன்று மாலை இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

image

வங்க கடலில் இருந்து ஈரப்பத காற்று குமரி மாவட்ட மலைகளின் மீது மோதுவதாலும், அரபிக் கடல் பகுதியில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வரும் தரைக்காற்று மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் முறிவை ஏற்படுத்தி இன்று(நவ.,23) மாலை கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் இந்த மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 23, 2024

தொடர் மழை: மின் பழுது குறித்த இந்த நம்பருக்கு சொல்லுங்க! 

image

மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்தால் அவற்றைத் தொடவோ, அருகில் செல்லவோ கூடாது. மரக்கிளைகள், தென்னை மர ஓலைகள் போன்ற  பொருள் மின் கம்பிகளில் தொங்கிக்கொண்டிருந்தால் பொதுமக்கள் அவற்றை தொட முயற்சிக்கக்கூடாது. இவை பற்றி மின் வாரியத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். மின் பழுதுகளை 94458 54477, 94458 59502 என கைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என குமரி மின் பகிர்மான மேற்பார்வையாளர் பத்மகுமார் நேற்று கூறினார்.

News November 23, 2024

முதல்வர் மருந்தகத்திற்கு விண்ணபிக்க அவகாசம் நீட்டிப்பு

image

குமரி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. mudhalvarmarnunthagam.tn.gov.in என்ற வெப்சைட்டில் நவ.,30 வரை விண்ணப்பிக்கலாம். டி.பார்ம், பி.பார்ம் படித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் முதல்வர் மருந்தகம் தொடங்கலாம். இதன்மூலம் மக்கள் குறைந்த விலையில் மருந்துகள் பெறலாம் என குமரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி தெரிவித்தார்.

News November 23, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 10:30 மணிக்கு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து காமராஜர் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம். #காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம். #மாலை 5 மணிக்கு குளச்சல் பேருந்து நிலையத்தை திறக்காததை கண்டித்து CPIML லிபெரேஷன் கட்சி சார்பில் குளச்சலில் ஆர்ப்பாட்டம்.

News November 23, 2024

பிடி ஆணையை நிறைவேற்ற தீவிரம் காட்ட வேண்டும்: குமரி SP

image

நாகர்கோவிலில் மாவட்ட SP சுந்தரவதனம் தலைமையில் நேற்று(நவ.,22) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய SP சுந்தரவதனம், போக்சோ புகார்களுக்கு தாமதமின்றி உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும். திருட்டுப் பொருட்களை மீட்க நடவடிக்கை எடுப்பதுடன் நீதிமன்ற பிடி ஆணையை நிறைவேற்ற தீவிரம் காட்ட வேண்டும் என்றார்.

News November 23, 2024

பெண் காவலர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கல்

image

ஆயுதப் படையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்க மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் உத்தரவிட்டார். அதன் பேரில் வாகன ஓட்டுநர் பயிற்சி முடித்த பெண் காவலர்களுக்கு மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் ஓட்டுனர் உரிமங்களை நேற்று வழங்கினார். மொத்தம் 35 பெண் காவலர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டன.

News November 22, 2024

நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்

image

RRB தேர்வை முன்னிட்டு திருவனந்தபுரம் – நாகர்கோவில் இடையே இம்மாதம் 24 ம் தேதி முதல் இம்மாதம் 28 வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாகர்கோயில்-திருவனந்தபுரம் இடையே இம்மாதம் 25 ம் தேதி முதல் 29 வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதனை கோட்ட ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

News November 22, 2024

குமரி அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு அறிவிப்பு

image

குமரி தபால் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“அமைப்பு சாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் கார்டு பல சலுகைகளை வழங்குகிறது. ஓய்வூதியம், இறப்பு காப்பீடு மற்றும் ஊனமுற்றால் நிதி உதவி போன்ற நன்மைகளைப் பெற தொழிலாளர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகி, இ-ஷ்ரம் போர்ட்டில் 25ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்” என கூறியுள்ளார்.

News November 22, 2024

குமரி ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 95 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு ஊராட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டத்தில் அந்தப் பகுதி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!