India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2023-ல் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் எய்ட்ஸ் கட்டுப்பாடு சொசைட்டி15,700 பேருக்கு H.I.V. தொற்று பரிசோதனை நடத்தியதில் 60 பேருக்கு தொற்று இருந்தது. நடப்பாண்டியில் 17,400 பேருக்கு பரிசோதனை நடத்தியதில், 24 பேருக்கு H.I.V. இருந்தது. குமரியில் மொத்தமாக 6,800 பேருக்கு H.I.V. தொற்றுள்ளது. இதில் 4,800 பேர் முறையாக சிகிச்சை பெறுகின்றனர். கல்லூரி மாணவர்கள் சிலரும் இதில் அடங்குவர் என தகவல்.
கன்னியாகுமரியில் இருந்த ஹவுராவுக்கு வாரம்தோறும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று வருகிறது. கிழக்குக் கடற்கரை ரயில்வே குர்தா பிரிவில் 3வது ரயில் பாதை பணி காரணமாக இம்மாதம் 14ஆம் தேதி குமரியில் இருந்து ஹவுரா புறப்படும் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதை போன்று 16ஆம் தேதி ஹவுராவிலிருந்து குமரி வரும் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கான கிளைத்தேர்தல் கடந்த மூன்று நாளாக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் SRMU, DREU, DRKS, SRES ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. மொத்தம் உள்ள 1120 வாக்காளர்களில் இன்றுடன் முடிந்த வாக்குப்பதிவில் மொத்தம் 912 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டதிருவனந்தபுரம் இன்று கொண்டு செல்லப்பட்டன.
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் அமலா ஜெஸி ஜாக்குலின். இவர் ஊரக வளர்ச்சித் துறையில் AEE ஆக நாகர்கோவிலில் பணியாற்றிய போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக VACவழக்கு பதிவு செய்தது. வழக்கை விசாரித்த நாகர்கோவில் CJM அமலாஜெஸி ஜாக்குலின் மற்றும் அவரது கணவர் ராஜேஸ்வரன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.50,000 அபராதமும் இன்று விதித்தார். அமலா ஜெஸி ஜாக்குலின் தூத்துக்குடியில் பணியாற்றி வருகிறார்
கடையாலு மூடை சேர்ந்தவர் அப்பா முஜீப் இவரது மகள் சமிஹா பர்வீன். மலேசியாவில் நடந்த காது கேளாதருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வெள்ளி, தங்கம் பதக்கங்களை பெற்றுள்ளார். இந்நிலையைில், வரும் 9ஆம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு வரும் அவருக்கு தமிழகம் சார்பில் வரவேற்பு அளிக்க இருப்பதாகவும் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற இருப்பதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதாகுமாரி தலைமையில் இன்று (டிச.6) சிராயன்குழியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த டாடா சுமோவை சோதனை மேற்கொண்டார். அதில் 750 லிட்டர் வெள்ளை நிற மானிய மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தை ஒட்டி வந்த ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். இதை அடுத்து வாகனத்தையும் மண்ணெண்ணையையும், பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
வாடிகனில் நடைபெற்ற உலக மத பார்லிமெண்ட் மாநாட்டு நிகழ்ச்சியின்போது போப் ஆண்டவரை குமாரகோவில் NI பல்கலைக்கழக இணை வேந்தர் பைசல்கான் சந்தித்து நினைவு பரிசு வழங்கினார். நெய்யாற்றின்கரை தொழுகல் கிராமத்தில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய மண்கோப்பைகளை அவர் போப்பாண்டவருக்கு வழங்கினார். கோப்பைகள் குறித்து ஆர்வமுடன் போப் ஆண்டவர் கேட்டறிந்தார். மண் கோப்பைகள் இனி போப் ஆண்டவரின் உணவு மேசையில் இடம் பெறும் என தகவல்.
2025 ஏப்ரலில் நடைபெறும் 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள் இன்று(டிச.,6) முதல் அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பில் தோல்வியானவர் விண்ணப்பிக்கலாம்; கடைசி நாள் 17.12.24; தேர்வு கட்டணம் மொத்தம் ரூ.195; கூடுதல் தகவல்களை dge.tn.gov.in தளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
குமரி மாவட்ட ஆவின் மூலமாக பால் மற்றும் பலவித பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 25,000 லிட்டர் பால் கொள்முதல் செய்து 23,500 லிட்டர் பால் தினமும் விற்பனை செய்யப்படுகிறது. மாதம்தோறும் பதாம் மிக்ஸ் பவுடர் 6 டன், பால்கோவா 1.5 டன், குல்பி ஐஸ் 7,000 விற்பனையாகிறது. 2024-25 நிதியாண்டில் இதுவரை ரூ.48 லட்சம் லாபம் ஈட்டியுள்ளதாக மாவட்ட ஆவின் அதிகாரிகள் நேற்று கூறினர்.
மலேசியாவில் நடைபெற்று வரும் காது கேளாதோருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று(டிச.,6) ‘Triple Jump’ பிரிவில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுதன் என்ற மாணவர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். நேற்று(டிச.,5) குமரியை சேர்ந்த மாணவி ஹமீஷா பர்வின் தங்கப்பதக்கமும் வெள்ளிப் பதக்கமும் வென்றது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.