India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் நிறுவப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு முதன்முதலில் அடிக்கல் நாட்டியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர். எனவே திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு கல்வெட்டில் எம்ஜிஆரின் பெயரை வைக்க வேண்டும் என்று குமரி தொகுதி அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கேரளா அரசு பேருந்து நாகர்கோவில் நோக்கி நேற்று(டிச.,09) இரவு வந்து கொண்டிருந்தது. சாமியார் மடம் பகுதியில் வந்தபோது மர்ம நபர்கள் பேருந்தில் கல்வீசி உள்ளனர். இதில் பேருந்து கண்ணாடி உடைந்தது. ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கி விட்டுள்ளார். அரசு பேருந்து ஓட்டுநர் கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு அறிற்கை வெளியிட்டுள்ளது. அதில், “குமரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட 41 வாகனங்கள் நாகர்கோவில் ஏஆர் கேம்ப் மைதானத்தில் வரும் 16ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் முன்னிலையில் பொது ஏலம் விடப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்துகொள்ளலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட குற்ற பிரிவுகள், தனிப்பிரிவு மற்றும் மாவட்ட ஆயுதப்படை ஆகியவற்றை இன்று தென் மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆய்வு மேற்க்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவனமும் உடன் இருந்தார்.
விவசாய விளை பொருட்கள் மற்றும் அத்தியாவசியமான உணவு வகைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளார். பாமர மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் ஆட்டா, மைதா, ரவை, கடலை மாவு போன்ற உணவுப் பொருட்களுக்கு GSTவரியை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
குமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள பொற்றையடி வைகுண்டபதியில் 1800 அடி உயர மருந்துவாழ் மலை அமைந்துள்ளது. இந்த மலை உச்சியில் திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி வரும் 13ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றுவதற்கான எண்ணெய் தொட்டி சீரமைக்கும் பணி இன்று(டிச.,9) தொடங்கியது. இந்த பணியில் மருந்துவாழ் மலை பாதுகாப்பு இயக்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் 11 ஆம் தேதி இரவு நாகர்கோவில் வருகிறார். நாகர்கோவில் அரசு பயணிகள் விடுதியில் தங்கும் அவர், 12 ஆம் தேதி காலை தாமரைபதி மற்றும் சாமிதோப்பு ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அங்கு அவர் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுவதுடன் நூல் ஒன்றையும் வெளியிடுகிறார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி வழியாக சென்னை செல்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாவட்ட SP சுந்தரவதனம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, காவல் நிலையங்கள் வாரியாக ரவுடி பட்டியலில் உள்ளவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள், அவர்கள் செயல்பாடுகள் போன்றவற்றை கண்காணிக்க காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து ரவுடிகளை கண்காணிக்கும் வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
#காலை 11 மணிக்கு துணை முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நாகர்கோவில் திமுக தலைமை அலுவலகத்தில் வைத்து சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. #பகல் 12:30 மணிக்கு துணை முதலமைச்சர் பிறந்த நாளை ஒட்டி குமரி கிழக்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் புளியடி மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திண்டுக்கல் – திருச்சி இடையே நடைபெற இருக்கும் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் சென்னை விரைவு வரையில் இம்மாதம் 12, 14, 17, 21, 26, 28, 31 மற்றும் ஜனவரி மாதம் 3, 4, 6, 7, 8, 9, 11 ஆகிய தேதிகளிலும், சென்னை – குருவாயூர் விரைவு ரயில் இம்மாதம் 14ஆம் தேதி மட்டும் மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயங்கும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது
Sorry, no posts matched your criteria.