India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் கடந்த ஆண்டு அதிகளவு விபத்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 334 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் இது அதிகபட்சமாகும். குறைந்தபட்சமாக 2020 ஆம் ஆண்டு 102 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்.
#இன்று(டிச.,160 காலை 10:30 மணிக்கு நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் CPIML Liberation சார்பில் 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்.#காலை 10 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாப் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#மாலை 5 மணிக்கு மார்த்தாண்டத்தில் பாஜக சார்பில் சாலை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
#இன்று(டிச.,16) காலை 8 மணிக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்த நிலையில், அவரது உறவினர்கள் ஐஎம்சியு வார்டு கதவு கண்ணாடியை உடைத்து பிரச்னையில் ஈடுபட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி அரசு மருத்துவர்கள் மாவட்ட சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டம்.#காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசுரப்பர் தொழிலாளர்கள் போராட்டம்.
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு அலுவலகத்தில் தற்காலிக உதவியாளர் சகிலா மற்றும் சகாய ஜென்சி,ஆலிஸ் பிரைட் ஆகியோர் சேர்ந்து 69 நபர்களிடம் ரூ.70 லட்சம் வாங்கிக் கொண்டு போலி கையெழுத்து மூலம் வீடு ஒதுக்கீடு வழங்கி அவர்களை குடியமர்த்தி மோசடி செய்துள்ளனர். இதை அறிந்த உதவி நிர்வாக பொறியாளர் ராஜகோபால் கொடுத்த புகாரில் அஞ்சுகிராமம் போலீசார் ஷகிலா, சகாய ஜென்சி ஆகியோரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
குமரி மாவட்டம் விளவங்கோடு எம்.எல்.ஏ தாரகை சகோதரர் சுகம் கத்பட் 6 நாட்களுக்கு முன் பஹ்ரைன் நாட்டில் வைத்து உயிரிழந்தார். அவரது உடல் நல்லடக்கம் நாகர்கோவில் திருஇருதய ஆலயத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (டிச.17) மாலை 3.00 மணி நல்லடக்க திருப்பலி நடைபெறும். அதைத்தொடர்ந்து நல்லடக்கம் ஜேக்கப் ஸ்ட்ரீட் பகுதியில் அமைந்துள்ள அசிசி கல்லறை தோட்டத்தில் வைத்து நடைபெறும் என எம்.எல்.ஏ தாரகை அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்து ஒரு வாரத்திற்கு பெரும்பாலான இடங்களில் மழை வாய்ப்பு கிடையாது. வறண்ட வானிலையே காணப்படும். பொதுவாக டிசம்பர் மாதத்தில் இருந்தே கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை குறைய ஆரம்பித்து விடும். வர இருக்கும் ஒரு வாரத்திற்கு பகல் நேரத்தில் தெளிவான வானத்துடன் வறண்ட வானிலையே காணப்படும். நள்ளிரவு, அதிகாலை நேரத்தில் பனி பொழிவு காணப்படும் என குமரி தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பனை மரங்கள் தற்போது அழிந்து வருகின்றன. அதனை பாதுகாக்கும் முயற்சிகள் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு பனை விதைகள் விதைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பனை மரங்களில் 34 வகை மரங்கள் இருப்பதாக விவசாய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்,பெண் பனை, கூந்தப்பனை, தாளிப்பனை, குமுதிப்பனை, சாற்றுப்பனை, ஈஞ்சம் பனை, ஈழப்பனை, சீமைப்பனை, நிலப்பனை, அலகுப்பனை உள்ளிட்ட வகைகள் இதில் அடங்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரியில் இன்று காலை சூறாவளி காற்றுடன் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் கடலில் ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சைத் அலைகள் எழும்பி வீசின. இதனால் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ரயில் பெட்டிகளில் கற்பூரம் ஏற்றுவது மிகவும் ஆபத்தானது மற்றும் தீ விபத்திற்கு காரணமாகவும் அமைகிறது. எனவே ஐயப்பன் பக்தர்கள் புனித யாத்திரை பயணத்தில் ரயில் பெட்டிகள் கற்பூரம் ஏற்ற வேண்டாம் எனவும், உங்களுடன் பயணிக்கும் சகப் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் நேற்று பார்வதிபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த அருண்ராஜ் ( 27) என்பவரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. அவருக்கு ரூ.17,000 அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று மட்டும் நாகர்கோவிலில் போக்குவரத்து விதி மீறிய 124 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.