India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகர்கோவில் IRT ஓட்டுநர் பயிற்சி மையத்தில் ஐன.,2ஆம் தேதி கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி ஆரம்பமாக உள்ளது. விருப்பம் உள்ளவர்கள்(மகளிர் உட்பட) இதில் சேர்ந்து பயிற்சி பெறலாம். மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், அசல் ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு, வகுப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4 ஆகியவற்றை 2 செட் ஜெராக்ஸ் எடுத்து அதற்குரிய கட்டணம் செலுத்தி பயிற்சி பயிற்சியில் சேரலாம்.
குமரி மாவட்டத்தில் உள்ளி(சின்ன வெங்காயம்) 1 கிலோ விலை ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா உட்பட வட மாநிலங்களில் சமீபத்தில் பெய்த மழையால் உள்ளி உற்பத்தி பாதித்து, வரத்து குறைந்ததால் ரூ.75-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் குமரி சந்தைகளில் கிலோ ரூ.400-க்கு விற்பனையான பூண்டு தற்போது ரூ.420-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
#இன்று(டிச.,18) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை முன்பு, மருத்துவர்களை நியமிக்ககோரி 21-வது நாளாக அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம். #காலை 10 மணிக்கு மார்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகில் CPIML Red Flag ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.#மாலை 5 மணிக்கு மத்திய அரசை கண்டித்து சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மாநகராட்சி பூங்கா முன்பு தர்ணா போராட்டம்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து, தற்போது மேற்படிப்பு படிக்கும் குமரி மாவட்ட மாணவர்கள் 7,578 பேருக்கு ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தில் மாதம் ரூ.1,000 வீதம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனவும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று(டிச.,17) தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி இம்மாதம் 26 ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்டத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் குழுக்களை மாவட்ட அளவில் தெரிவு, செயவதற்காக மாவட்ட அளவிலான முதல் நிலை வினாடி வினா போட்டி 21ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. 32 அதிகாரங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.
கன்னியாகுமரியில் இருந்து திப்ருகருக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. மாலை 5.25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து இந்த ரயில் புறப்பட்டு செல்கிறது. ஆனால் இந்த ரயில் இன்று 3 மணி 35 நிமிடம் தாமதமாக இரவு 9 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் பெட்டி பராமரிப்பு பணி காரணமாக காலதாமதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நாட்டில் பெருகி வரும் வேலையின்மை குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த அவசர நிலை குறித்து பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும் எனவும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக” கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் பி விஜய் வசந்த் இன்று (டிச. 17) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ராமேஸ்வரத்தில் இருந்து இன்று அதிகாலை 4.10 மணிக்கு கன்னியாகுமரிக்கு ரயில் வந்தது. பகல் 10 மணிக்கு இந்த ரயிலை சுத்தம் செய்ய ஊழியர்கள் சென்ற போது ஒரு பெட்டியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். மும்பையைச் சேர்ந்த அவர் பெயர் ஷாலினி. அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
“குமரி மாவட்டத்தின் எல்லை பகுதியில் கேரளா வாகனங்கள் மூலம் மருத்துவ கழிவுகள் மற்றும் கோழி கழிவுகளை கொட்டி வருகின்றனர். பல்வேறு வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டாலும் மீண்டும் குப்பைகளை கொட்டுவது தொடர்கிறது. இனிமேலும், தொடர்ந்தால் 2025 ஜனவரி மாதத்தில் பொதுமக்களை ஒன்று திரட்டி குப்பைகளை லாரியில் ஏற்றி கேரளாவில் கொண்டு கொட்டுவோம்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபட்டுள்ளோர் 10,000 பேர் பயன்பெறும் வகையில் 20 கோடி ரூபாயில் கலைஞர் கைவினைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 50 ஆயிரம் ரூபாய் அதிகபட்ச மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மாவட்ட தொழில் மையத்தை அணுக கேட்டுக்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.