Kanyakumari

News December 24, 2024

கன்னியாகுமரி: வரும் சனிக்கிழமை லீவ் கிடையாது!

image

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாளான இன்று(டிச.,24) மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்க வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக வரும் சனிக்கிழமை(டிச.,28) அன்று வேலை நாளாக இருக்கும் என்பதையும் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 24, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(டிச.,24) காலை 11 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு மத்திய அமைச்சர் அமைச்சவையை கண்டித்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர்.#காலை 11.15 மணிக்கு டெரிக் சந்திப்பில் உள்ள முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர். #காலை 11.30 மணிக்கு அமித்ஷா மீது நடவடிக்கை எடுத்து கேட்டு ஆட்சியரிடம் காங்., கட்சியினர் மனு அளிக்கின்றனர்.

News December 24, 2024

தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா ரயில் நேரம் மாற்றம்

image

தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கும் அந்தியோதயா ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் தாம்பரம் – நாகர்கோவில் (20691) அந்தியோதயா அதி விரைவு ரயிலின் நேரம் மாற்றப்படுகிறது. அதன்படி இரவு 11 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 10.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 23, 2024

குமரி மக்கள் குறைதீர் கூட்டம் நிறைவு

image

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (டிச.23) நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 321 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. உடன், மாவட்ட வருவாய் அலுவலர் திர.ஜெ.பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News December 23, 2024

குமரி மேற்கு மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியீடு

image

குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜான் தங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “குறிப்பில் எம்.ஜி.ஆரின் 37 ஆவது நினைவு தினத்தை ஒட்டி, நாளை 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு தக்கலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு எனது தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது; இதில், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

News December 23, 2024

குமரியில் இருந்து கயா, பனாரசுக்கு சிறப்பு ரயில்கள்!

image

உத்தரப்பிரதேச கும்பமேளாவுக்காக ஜன.,6 இரவு 8.30 மணிக்கு குமரியில் இருந்து புறப்படும் ரயில், ஜன.,9 காலை கயா செல்லும். ஜன.,9 இரவு 11.55 மணிக்கு கயாவில் இருந்து புறப்பட்டு ஜன.,12 அதிகாலை குமரி வரும். பிப்.,17 இரவு 8.30 மணிக்கு குமரியில் இருந்து புறப்படும் ரயில் பிப்.,17 இரவு 9.50க்கு பனாரஸ் செல்லும். பிப்.,20 அங்கிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் பிப்.,22 இரவு 9 மணிக்கு குமரி வரும்.

News December 23, 2024

குமரியில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(டிச.,23) மாலை 5 மணிக்கு, அருமனை கிறிஸ்தவ இயக்க 27 ஆம் ஆண்டு விழாவில் இசை நிகழ்ச்சி. மாலை 6 மணிக்கு ஊர்வலம்.இரவு 8 மணிக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்கும் சமூக நல்லிணக்க மாநாடு. #காலை 8.30 மணிக்கு, திற்பரப்பு நல்லூர் விளையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 235 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல். #மாலை 5 மணிக்கு, இருளப்பபுரம் CSI சபையில் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள்.

News December 23, 2024

குமரி மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(டிச.,23) காலை 10 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு மத்திய அமைச்சரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம். #காலை 10.30 மணிக்கு நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா அருகே குமரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ரசூல் தலைமையில் ஆர்ப்பாட்டம். #மாலை 4 மணிக்கு ரவுண்டானா பகுதியில், குமரி கடலில் கழிவுகள் கலப்பதை கண்டித்து CPIML ஆர்ப்பாட்டம்.

News December 23, 2024

குமரியில் ஆணழகன் போட்டி நடைபெற்றது

image

குமரி அருகே உள்ள தென்தாமரைகுளம் தாமரைசக்தி மஹாலில் லயன் ஜிம் சார்பாக16-வது ஆணழகன் போட்டி நேற்று (டிச.22) நடந்தது. இதில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் தாமரைப்பிரதாப், வக்கீல் ஆல்பர்ட் பண்ணையார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News December 22, 2024

ஹூப்ளி – குமரி இடையே சிறப்பு ரயில் நாளை இயக்கம்

image

கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு ஹூப்ளியிலிருந்து கன்னியாகுமரிக்கு நாளை (23) மாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பெங்களூர், கிருஷ்ணராஜபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக இந்த ரயில் கன்னியாகுமரி வந்தடையும் 24 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து இரவு 7.35 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு ஹூப்ளி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!