India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிள்ளைத்தோப்பு மீனவர் ஆன்றோ ஆரோக்கியம் ராஜ்(43). இவர் திருச்சியை சேர்ந்த ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். முதல் கணவருக்கு பிறந்த மகளுடன் வசித்து வந்த நிலையில், சிறுமிக்கு ஆன்றோ ஆரோக்கியம் ராஜ் பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். கடந்த 26ம் தேதி இரவு மனைவி, மகளை மது அருந்த வற்புறுத்தவே இருவரும் தப்பித்து வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தனர். போக்சோ வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
குமரியில் விவேகானந்தர் நினைவு பாறைக்கு தினமும் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து ஆரம்பமாகும். வரும் 30ம் தேதி காலை 6 மணிக்கே படகு போக்குவரத்து துவங்கி 12 மணிக்கு முடிகிறது. “திருவள்ளுவர் சிலை 25-ம் ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு வரும் டிச.30 அன்று படகு போக்குவரத்து பயணச்சீட்டு காலை 06.00 மணிக்கு தொடங்கி மதியம் 12.00 மணி வரை வழங்கப்படும்” எனபூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலமானதைத் தொடர்ந்து ஏழு நாள் அரசு துக்க அனுசரிக்கப்படும் என்றும் அரசு விழாக்கள் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 30ஆம் தேதி தொடங்கி 1ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மன்மோகன் சிங் மறைவு காரணமாக இந்த விழா நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஈரடியில் பேரறிவு தந்த ஐயன் வள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் தலைமையில் குமரியில் வெள்ளிவிழா டிசம்பர் 30, 31 & ஜனவரி 01 ஆகிய தினங்களில் நடக்கிறது. இவ்விழாவில் திமுகவினர் உட்பட அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சரும், குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான மனோ தங்கராஜ் எம்எல்ஏ அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 2ஆம் நாள் நிகழ்ச்சியாக, டிச.31ஆம் தேதி காலை 11:30 மணிக்கு கருத்தரங்கு நடைபெறுகிறது. அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பேராசிரியர் கருணானந்தன், கரு பழனியப்பன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன், வழக்கறிஞர் அருள்மொழி, பேராசிரியர் விஜய சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 3 நாள் நடக்கிறது. முதல் நாளான டிச.30 அன்று இரவு 7 மணிக்கு நடைபெறம் பட்டிமன்றத்தில், சுகிசிவம் நடுவராக இருந்து பட்டிமன்றத்தை நடத்துகிறார். ராஜாராம், மோகனசுந்தரம், மதுவூர் ராமலிங்கம், புலவர் சண்முக வடிவேல், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குத் தொடர் மலைகளின் மேல் உச்சிப் பகுதியில், கிழக்கு திசை ஈரக்காற்று மோதி நாளை(டிச.28) மேக கூட்டங்கள் உருவாக சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தின் சமவெளி பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் லேசான சாரல் மழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கன்னியாகுமரி தனியார் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது.
#இன்று(டிச.27) காலை 6 மணிக்கு கன்னியாகுமரி பழத்தோட்டம் பகுதியில் உள்ள சேவா பாரதிக்கு சொந்தமான இல்லத்தில் ஆர்எஸ்எஸ் மகளிர் அமைப்பின் பண்பு பயிற்சி முகாம் நடக்கிறது.#மாலை 5 மணிக்கு இடலாக்குடி சந்தி தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது.#காலை 9 மணிக்கு மருத்துவரை நியமிக்க வலியுறுத்தி கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை முன்பு 28வது நாளாக உண்ணாவிரதம் நடக்கிறது.
பெண்கள் மீது இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாளை(டிச.27) காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தொடங்கி வைக்கிறார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்கிறார்கள்.
திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி கன்னியாகுமரியில் டிச.30, 31, ஜனவரி, 1 ஆகிய மூன்று தினங்கள் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நடைபெறுகிறது. 31ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து, குன்றக்குடி அடிகளார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அழைப்பிதழ்களில் அவர்கள் பெயர் போடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.