India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உத்தரப்பிரதேச கும்பமேளாவுக்காக ஜன.,6 இரவு 8.30 மணிக்கு குமரியில் இருந்து புறப்படும் ரயில், ஜன.,9 காலை கயா செல்லும். ஜன.,9 இரவு 11.55 மணிக்கு கயாவில் இருந்து புறப்பட்டு ஜன.,12 அதிகாலை குமரி வரும். பிப்.,17 இரவு 8.30 மணிக்கு குமரியில் இருந்து புறப்படும் ரயில் பிப்.,17 இரவு 9.50க்கு பனாரஸ் செல்லும். பிப்.,20 அங்கிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் பிப்.,22 இரவு 9 மணிக்கு குமரி வரும்.
#இன்று(டிச.,23) மாலை 5 மணிக்கு, அருமனை கிறிஸ்தவ இயக்க 27 ஆம் ஆண்டு விழாவில் இசை நிகழ்ச்சி. மாலை 6 மணிக்கு ஊர்வலம்.இரவு 8 மணிக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்கும் சமூக நல்லிணக்க மாநாடு. #காலை 8.30 மணிக்கு, திற்பரப்பு நல்லூர் விளையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 235 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல். #மாலை 5 மணிக்கு, இருளப்பபுரம் CSI சபையில் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள்.
#இன்று(டிச.,23) காலை 10 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு மத்திய அமைச்சரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம். #காலை 10.30 மணிக்கு நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா அருகே குமரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ரசூல் தலைமையில் ஆர்ப்பாட்டம். #மாலை 4 மணிக்கு ரவுண்டானா பகுதியில், குமரி கடலில் கழிவுகள் கலப்பதை கண்டித்து CPIML ஆர்ப்பாட்டம்.
குமரி அருகே உள்ள தென்தாமரைகுளம் தாமரைசக்தி மஹாலில் லயன் ஜிம் சார்பாக16-வது ஆணழகன் போட்டி நேற்று (டிச.22) நடந்தது. இதில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் தாமரைப்பிரதாப், வக்கீல் ஆல்பர்ட் பண்ணையார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு ஹூப்ளியிலிருந்து கன்னியாகுமரிக்கு நாளை (23) மாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பெங்களூர், கிருஷ்ணராஜபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக இந்த ரயில் கன்னியாகுமரி வந்தடையும் 24 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து இரவு 7.35 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு ஹூப்ளி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கன்னியாகுமரியில் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய 3 தினங்கள் நடைபெறுகிறது. “இந்த விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள் பள்ளிக்கல்வி துறை ஆசிரியர்கள், தமிழ் சங்கங்கள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பாளராக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்” என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கேட்டுக் கொண்டுள்ளார்.
குமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகளை ஏற்று செல்லும் படையில் திருவள்ளுவர் குறித்த தகவல்களை பொறித்திட பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தியுள்ளார்.
குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ இன்று(டிச.22) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “எம்.ஜி.ஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இம்மாதம் 24ஆம் தேதி நாகர்கோவில் வடசேரியில் உள்ள MGR உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது; இந்நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் கழக நிர்வாகிகள் அணி திரண்டு வர வேண்டும்” என கூறியுள்ளார்.
இருதிசை காற்று சந்திப்பு காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (டிச.22) மாலை, இரவு நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய இடங்களில் மேக கூட்டங்கள் உருவாகி அதன் நகர்வை பொறுத்து ஆங்காங்கே ஒருசில இடங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர் மற்றும் பணியாளர் காங்கிரஸ் மாநில துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள J.மரிய ஜெயசிங் இன்று (டிச.21) காமராஜர் மற்றும் அன்னை இந்திரா காந்தி ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் R.ராதாகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.