India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
#காலை 10 மணிக்கு மலையடிபளுகல் வட்டார CPIM மாநாடு. #காலை 10:30 மணிக்கு நாகர்கோவில் மாநகராட்சியுடன் புத்தேரி உள்ளிட்ட ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து புத்தேரி சந்திப்பில் ஆர்ப்பாட்டம். #மாலை 4 மணிக்கு மணலி பகுதியில் சாலையை சீரமைக்க கோரி, சிபிஐஎம் மணலி சந்திப்பில் ஆர்ப்பாட்டம். #மாலை 4 மணி திருவிதாங்கோடு சந்திப்பில் SDPI தெருமுனை கூட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதனை வரும் நவம்பர் 12ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் வாயிலாக திறந்து வைக்கவுள்ளார்.
குமரி எம்.பி. விஜய் வசந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “குமரி மாவட்ட ஏழை, எளிய மாணவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கு சொந்த செலவில் இந்த கல்வி ஆண்டில் ரூ.14.65 லட்சம் வழங்கியுள்ளேன்; நிதி இல்லாத காரணத்தால் எந்த மாணவரும் தங்கள் கல்வி பயணத்தை பாதியில் நிறுத்தி விட கூடாது என அவரது தந்தை மறைந்த வசந்த குமார் உறுதியுடன் இருந்தார்; இயன்றவரை உதவி செய்து கொண்டே இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.
“நகராட்சி ஆணையர்கள் தமது குடியிருப்புகளில், நகராட்சி பணியாளர்களை வீட்டு வேலைக்கு பணியமர்த்துவதாக தெரிய வருகிறது; நகராட்சி ஆணையர்கள் தங்களது குடியிருப்புகளில் நகராட்சி பணியாளர்களை வீட்டுப் பணிக்கு பணியமர்த்தக் கூடாது; இது போன்ற புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என நகராட்சிகளின் இயக்குநர் குமரி மாவட்ட நகராட்சிகளின் ஆணையர்கள் உட்பட அனைத்து ஆணையர்களுக்கும் அறிக்கை அனுப்பி உள்ளார்.
குமரி மாவட்டத்தில் அடிக்கடி வழக்குகளில் சிக்கி வருபவர்கள், கொடூர செயல்களில் ஈடுபடுபவர்கள், கஞ்சா போதைப் பொருள் தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் போன்றவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரையிலும் மாவட்டத்தில் மொத்தம் 50 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை தொடரும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், குமரி மாவட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட இருக்கிறது. இம்மாதம் 11 ஆம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை முப்பது நாட்களுக்கு ஆட்கொல்லி நோய்க்கான தடுப்பூசி கால்நடை பராமரிப்பு துறையால் போடப்பட இருக்கிறது. இதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் குட்கா விற்பனையை கட்டுப்படுத்த உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் தட்டான்விளை, கீழ புத்தேரி பகுதிகளில் மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின். ரேஷன் கடை விற்பனையாளர். இவருக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித் தருவதாக கூறி வனஜா & அவரது மகன் லாசர் ஆகியோர் ரூ.12.52 லட்சம் வாங்கி போலி பணி நியமன ஆணை வழங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து ஸ்டாலின் அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டபோது அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருவட்டார் போலீசார் வனஜா & லாசர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குமரி மாவட்டம், பத்மனாபபுரம் வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளின் குறை தீர்க்கும் முகாம் பத்மனாபபுரம் உதவி ஆட்சியர் தலைமையில் நாளை(12.11.2024) முற்பகல் 10.30 மணிக்கு பத்மனாபபுரம் உதவி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் வட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு பயனடையுமாறு ஆட்சியர் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மெகா தூய்மை பணியினை இன்று(நவ.,9) கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.