India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே, வங்கதேசத்தில் இந்து கோயில்கள் மற்றும் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து, பாஜக இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இணைந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் நம்பிநாராயணன், காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ.தலைவர் பாபு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், 102 பேரை போலீசார் கைது செய்தனர். அதன்பின் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.
B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (டிச.5) கடைசி நாள் என்பதால், விருப்பமுள்ள தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மானியமாக ரூ.3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.
காஞ்சிபுரத்திலிருந்து செவிலிமேடு வழியாக செல்லும் வந்தவாசி சாலையில் இளம் பெண் ஒருவர் திடீரென்று சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து நின்று உள்ளார். அப்போது தகவல் அறிந்து வந்த பெண் காவலர்கள் அப்பெண்ணை அழைத்து செல்ல முற்பட்டபோது, இளம்பெண் அப்பகுதியில் இருந்து வருவதற்கு மறுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்கி வரும் நிலையில் கனிமவளத்துறையின் விதிகளை மீறி கனிமவள வாகனங்கள் இயக்கப்படுவதாக புகார் தெரிவித்ததின் பெயரில், சோதனையில் இதுவரை 573 கனிமவள வாகனங்கள் விதிகளை மீறி இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் ஆணைப்படி, இன்றும் நாளையும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட முன்னணி நிர்வாகிகள், பெண்கள் மற்றும் தலித்தல்லாதோரை புதிய பொறுப்பாளராக மனு செய்ய காஞ்சிபுரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் தி.வ.எழிலரசு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோல், காஞ்சிபுரம் சட்டமன்றத்தொகுதி நிர்வாகிகள் மனு செய்ய மாநகர செயலாளர் மதி.ஆதவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2021இ ல் இருந்து தற்போது வரை, அதாவது சுமார் 3.5 ஆண்டுகளில் மட்டும் 526 டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் அதிகாரிகள் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஒலிமுகமதுபேட்டை, சிறுகாவேரிப்பாக்கம், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், ஓரிக்கை, சுங்குவார்சத்திரம் போன்ற பகுதிகளில் ரேஷன் அரிசியை பதுக்குவது கடத்துவது போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 383 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 247 ஏரிகள் 75%-100% , 148 ஏரிகள் 50%-75%, 129 ஏரிகள் 25%-50% நிறைந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே ஏரிகளில் ஓரம் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடுமையாக மழை பெய்து வந்தது. இதனால், மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் சில இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு, மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த வரும் டிச.10ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி மின் கட்டணத்தை செலுத்துங்கள். ஷேர் செய்யுங்கள்.
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வாயிலாக தண்ணீர் திறந்து விடபட்டது. செம்பரம்பாக்கம் ஏரி 21 அடியை எட்டும் தருவாயில் உள்ளதால் பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி, கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயலினால் கடந்த இரண்டு நாட்களில் ஏற்பட்ட மழைப்பொழிவின் காரணமாக, காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் (KTCC) மொத்தம் உள்ள 1644 ஏரிகளில், நேற்றைய நிலவரப்படி 141 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி இருந்த நிலையில், இன்று (டிச.2) நிலவரப்படி 529 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன (388 ஏரிகள் கூடுதலாக) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.