India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
படப்பை அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் கோபால்ராஜ் – பரமேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், நேற்று காலை கோபால்ராஜ் மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின், மணிமங்கலம் காவல் நிலையத்தில் கோபால்ராஜ் சரணடைந்தார். பின், அங்கிருந்து தப்பிச்சென்ற அவரை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பரமேஸ்வரி சிலருடன் தகாத உறவில் இருந்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் ரெகுலர் தாசில்தார் உட்பட 5 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் ரெகுலர் தாசில்தாராக பணியாற்றி வந்த சத்யா, நெடுஞ்சாலை திட்ட நில எடுப்பு பிரிவுக்கு கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில், ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியரின் உதவியாளராக பணியாற்றிய மோகன்குமார் காஞ்சிபுரம் ரெகுலர் தாசில்தாராக நியமிக்கப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே மாடம்பாக்கம் தாய் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் கோபால் ராஜ் (33). இவரது மனைவி பரமேஸ்வரி (26). இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பரமேஸ்வரி நடத்தையில் சந்தேகம் அடைந்த கோபால் ராஜ் பரமேஸ்வரியின் கழுத்தை நெறித்து இன்று கொலை செய்துவிட்டு மணிமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் கோபால் ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் வேடல் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து சென்னை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த நான்கு இளைஞர்கள் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர். மேலும், சிறிது நேரம் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி இன்று தொடங்கியது. இந்தப் பேரணியை ஆட்சியர் கலைச்செல்வி தொடங்கி வைத்தார். நுகர்வோரின் உரிமைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு கொள்ளும் வகையில், மாணவிகள் பேரணியில் கோஷமிட்டனர். இதில், மாவட்ட வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆந்திர மாநிலம் பலமநேரி, புங்கனூர், மதனபள்ளி, கர்நாடக மாநிலத்தில் தாவணிகரை மற்றும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி பயிரிடப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் விளையும் தக்காளி, காஞ்சிபுரம் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் மழையின்போது, காஞ்சிபுரத்தில் 1 கிலோ தக்காளி ரூ.80க்கு விற்கப்பட்டது. தற்போது வரத்து அதிகரித்ததால் 1 கிலோ ரூ.40க்கு விற்கப்படுகிறது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. வாடகைதாரர்கள் செலுத்த வேண்டிய பணம் பல கோடி ரூபாய் நிலுவையில் இருந்து வருகிறது. மாநகராட்சி ஆணையர் ரவீந்திரன் உத்தரவின்படி, அதிகாரிகள் ரூ.1.30 கோடி வாடகை பாக்கி வைத்திருந்த உணவகம் உள்ளிட்ட 7 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.
கடந்த மாதம் மாங்காட்டில் மோட்டார் சைக்கிளில் கணவன் மனைவி சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் தாலி செயினை பறித்து கொண்டு சென்றார். இது குறித்து மாங்காடு போலீசார் தீவிரமாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது பட்டாபிராம் கரிமேடு பகுதியை சேர்ந்த குணசேகரன்(33) என்பது தெரிய வந்தது. சுமார் 350க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குணசேகரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள BPharm, DPharm பட்டம் பெற்றவர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர் இன்று (05.12.2024) வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் 10.12.2024 வரை நீட்டிப்பு செய்து காஞ்சிபுரம் மாவட்ட இணை பதிவாளர் ஜெயஸ்ரீ அறிவித்துள்ளார்.
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரும் மனு மீது 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிஐடியு தொடர்ந்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு நிறுவனத்தின் பெயரில் தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை இல்லை என சாம்சங் நிறுவனம் வாதிட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.