India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Audiometrician, இளம் செவித்திறன் குறைபாடுடைய பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட தகுதி உள்ள நபர்கள் https://kancheepuram.nic.in/இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்து டிசம்பர்.31க்குள் காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்திற்கு அனுப்பலாம்.
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், வரும் 20ல், காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், காலை 10:30 மணிக்கு, கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், வேளாண் அறிவியல் நிலைய வல்லுனர்கள் பங்கேற்று, வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள், விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே வேளாண் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் படி டிச.18ஆம் தேதி குன்றத்தூர் வட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தில் கோரிக்கை மனுக்கள் அளிக்க விரும்பும் மக்கள் குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 4.30 முதல் 6.00 வரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மார்கழி மாதம் இன்று (டிச.16) பிறப்பதால், கோயில்கள் அனைத்தும் அதிகாலை 4:30 மணிக்கு திறக்கப்படும். சிவன் கோயில்களில் திருவெம்பாவை, திருபள்ளியெழுச்சி பாடபடும். விஷ்ணு கோயில்களில் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடப்படும். இந்த மார்கழி மாத அதிகாலை பள்ளியெழுச்சி பூஜையில் பங்கேற்பதால் கர்ம வினைகள் நீங்கி புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம். எனவே, இன்று மறக்காமல் கோயிலுக்கு சென்று மார்கழியைத் தொடங்குங்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஆகிய இரு தாலுகாக்களில், சென்னையின் பெல்ட் ஏரியா எல்லைக்குள் வரும் பகுதிகளில், ஆட்சேபனை இல்லாத அரசு நில ஆக்கிரமிப்பாளர்கள், 4,500 பேருக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அடுத்தகட்டமாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்குவது பற்றி அரசு தான் முடிவு செய்யும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனரக லாரி மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. மேல்மலையனூரைச் சேர்ந்தவர்கள் செங்கல்சூளை பணிக்காக சரக்கு வாகனம் மூலம் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, வாகனம் சுங்குவார்ச்சத்திரம் அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில், கைக்குழந்தை உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இனிப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 199 ரூபாய்க்கும், ‘சிறப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 499 ரூபாய்க்கும், பெரும் பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 999 ரூபாய்க்கும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10,000 மளிகை தொகுப்பு விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை இன்று இரங்கல் செய்தி வெளியிட்டார். அதில், “தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருமுறையும், ஒன்றிய அமைச்சராகவும் மிகச் சிறப்பாக பணியாற்றிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமான செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் முன்னிலையில் இன்று காலை (டிச.14) அதிமுக கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டு உற்சாகமாக வரவேற்கப்பட்டது. இந்த நிகழ்வில் அதிமுக கட்சியினர் பலர் கலந்து கொண்டனர் கொண்டனர்.
தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் எச்.ராஜா நேற்று காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ரூ.1,185 கோடி இந்துக்கள் நன்கொடைகள் மூலம்தான் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது, எதற்கு இந்த அறநிலை துறை இருக்கிறது? கோவில்களை நிர்வாகம் செய்வதற்கு துப்பு கிடையாது. இந்து விரோத அரசாங்கமாக தமிழ்நாட்டில் செயல்பட்டு கொண்டிருக்கிறது” என்று கடுமையாக விமர்சித்தார்.
Sorry, no posts matched your criteria.