India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜனவரி மாதத்திற்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மூன்றாம் கட்டமாக 4 நாட்கள் முகாம்கள் நடத்தி பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி, உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 10 முகாம்களும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 10 முகாம்கள் என மொத்தம் 20 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, பின்வரும் கிராமங்களில் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் பாஜக மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாமரை உ.ஜெகதீசன் தமிழக பாஜக மாநில செயலாளரும், விழுப்புரம் பெருங்கோட்டை பொறுப்பாளருமான வினோத் ப.செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வில் பாஜக மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட நிர்வாகி அதிசயம் பாக்குமார், மாநகர மேற்கு உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் தியாகு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நேற்று (20.01.2025) நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆட்சியர் கலைச்செல்வி மோகன், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை அருண், துணைத் தலைவர் அப்துல் குத்தூஸ் மற்றும் ஆணையக்குழு உறுப்பினர்கள் வரும் 29ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர். அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கு என்று தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்க உள்ளனர்.
நாளை(21.01.2025) காலை 10 மணிக்கு பெருநகர் பி.எஸ்.எம்.கே. திருமண மண்டபத்தில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை, அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
பரந்தூரில் விஜய் பேசியது தொடர்பான கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “முழு தமிழ்நாடும் புதிய விமான நிலையம் வேண்டும் என்பதை விரும்புகிறது. பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றால், விஜய் முன்மொழியும் மாற்று இடம் எது? என்பதையும் அவரே கூற வேண்டும்” என்று தெரிவித்தார்.
பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வரும் மக்களை, தவெக தலைவர் விஜய் நாளை பரந்தூர் அம்பேத்கர் திடலில் சந்திக்க காவல்துறையினரிடம் அனுமதி கோரி இருந்த நிலையில் தனியார் திருமண மண்டபத்தில் அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகிள்ளது. இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் தவெக கட்சியினர் மற்றும் போராட்ட குழுவினருடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
‘நைட் பிராங்க்’ நிறுவனத்திடம், மாஸ்டர் பிளான் தயாரித்து வழங்கும் ஆணை வழங்கப்பட்டு உள்ளது. அந்நிறுவனம், தன் பணிகளை தொடங்கியுள்ளது. இரண்டு – மூன்று கருத்துரு அடங்கிய அறிக்கையை தயாரித்து வழங்க வேண்டும். அதில் ஒன்றை தேர்வு செய்து, அதற்கேற்ப ‘டவுன்ஷிப்’ உருவாக்கப்பட உள்ளது. டவுன்ஷிப் உருவாக்கும் பணி முடிவடையும் வரை, நைட் பிராங்க் நிறுவனம், டிட்கோவுக்கு தேவைப்படும் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
பரந்துார் விமான நிலைய திட்டத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு, 245 ஏக்கரில் வீடு, பள்ளி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் ‘டவுன்ஷிப்’ உருவாக்கி தரப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு, ‘மாஸ்டர் பிளான்’ எனப்படும் முழுமை திட்ட அறிக்கையை உருவாக்கி தரும் பணிக்கு ஆலோசகராக, ‘நைட் பிராங்’ நிறுவனத்தை ‘டிட்கோ’ நியமித்துள்ளது. திட்ட அறிக்கை தயாரித்து தரும் ஆலோசகரை தேர்வு செய்ய 2024 செப்டம்பரில் டெண்டர் கோரியது.
Sorry, no posts matched your criteria.