India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய ரயில்வேயில் உள்ள குரூப்: D பிரிவில் மொத்தமுள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன. 10 மற்றும் ITI முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக தென்னக ரயில்வே கோட்டத்தில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. வயது 18-36க்குள் இருக்க வேண்டும். தொடக்கத்தில் 18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் மார்ச்.1க்குள் இந்த<
காஞ்சிபுரத்தில் நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த 3 திருடர்களை 100க்கும் மேற்பட்ட சிசிடிவிக்களை ஆய்வு செய்து போலீசார் கைது செய்தனர். பூட்டியிருக்கும் வீடுகளைக் குறிவைத்து பணம், நகை, வாகனங்களைத் திருடி வந்த கும்பலிடமிருந்து, 25 சவரன் நகைகள், 1 வைர மோதிரம், 340 கிராம் வெள்ளிப் பொருட்கள், கார், ஆட்டோ, விலையுயர்ந்த இருசக்கர வாகனம் என 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காஞ்சி மாநகராட்சிக்குட்பட்ட நத்தப்பேட்டை பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் இன்று (22.02.2025) காலை 8 மணிக்கு நெகிழி கழிவு சேகரிப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார். துணை ஆட்சியர் ஆஷிப் அலி, மாநகராட்சி ஆணையர் நவேந்திரன், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக் குப்பை நெகிழி சுத்தப்படுத்தினர்.
பணி நீக்கத்தைக் கண்டித்து தொழிலாளர்கள் ஆலை வளாகத்திலேயே கடந்த 16 நாள்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் சாம்சங் தொழிற்சாலையில் 14 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளராக 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ராயப்பன் இன்று (பிப்.,21) நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், அறிக்கையில், கட்சியில் இருந்து நிரந்தரமாக விலகுவதாகவும், இதுவரை உடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மேட்டுத்தெரு அருகே உள்ள பள்ளிக்கூடத்தான் தெருவில் உள்ள வீடு ஒன்றின் மாடியில், கிடங்கு அமைத்து, அதில் மெத்தை தயாரிக்கும் மூலப்பொருட்களான பஞ்சு உள்ளிட்ட பொருட்களை, நுாருல்லா,50. என்பவர் நடத்தி வருகிறார். இந்த கிடங்கில், நேற்று (பிப்.20) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கிடங்கின் நான்கு புறங்களிலும் தீ மளமளவென பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 53 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
ஸ்ரீபெரும்புத்தூரைச் சேர்ந்த திலீப் குமார் – ரேகா தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. ரேகாவுக்கு புனிதராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதால், திலீப் சண்டையிட்டுள்ளார். இதனால் கடந்த பிப்.15ஆம் தேதி புனித ராஜ் தனது நண்பர்கள் உடன் திலீப் குமாரை கொல்ல முயற்சி செய்தார். நல்வாய்ப்பாக திலீப் தப்பிவிட்டார். போலீசார், புனித குமார் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து ரேகாவை தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஏற்பாட்டில் காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள டாக்டர் பி எஸ் ஸ்ரீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வரும் பிப்.22 சனிக்கிழமை காலை 9 மணி முதல் ஒரு மணி வரை தனியார் துறை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது. ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரத்தில், இன்ஃப்ளூயன்ஸா தொற்று பரவி வருகிறது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். அறிகுறிகள் மற்றும் நோயின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சையளிக்க வேண்டும். தீவிர பாதிப்புள்ள 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.