Kanchipuram

News March 23, 2025

தொழில் தொடங்க கடனுதவி: கலெக்டர்

image

காஞ்சிபுரத்தில், முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டம் வாயிலாக முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். இவ்வாய்ப்பை காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். மேலும் தகவல்களுக்கு 044 22262023 என்ற எண்ணில் அழைக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News March 23, 2025

தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

image

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்தால் நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 23, 2025

காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரத்தில் இன்று (மார்.23) காலை 11 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் செய்யுங்கள்

News March 23, 2025

பிரபல குட்கா வியாபாரியான ‘சொர்ணாக்கா’ கைது

image

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்ப்புரம் பகுதியில் சட்டவிரோதமாக மது மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் போலீசார் அண்மையில் அங்கு சென்று சோதனை நடத்தியபோது, பிரபல குட்கா வியாபாரி சொர்ணாக்காவை கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர். சோதனையில் சிக்கிய மது மற்றும் குட்கா பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News March 22, 2025

காஞ்சி சஞ்சீவராயர் கோயில்

image

காஞ்சிபுரம், ஐயங்கார்குளம் என்ற ஊரில் அமைந்துள்ளது சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் திருக்கோயில். சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டு ஆஞ்சநேயர் பறக்கும்போது மலையை ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்றியபோது மலையிலிருந்து ஒரு சிறு பாகம் கீழே விழ, அந்த இடத்தில் கோயில் உருவானதாம். இங்கு வழிபட்டுச் சென்றால் கைவிட்டு போன பொருள் திரும்பக் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News March 22, 2025

காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி

image

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காதல் ஜோடி, கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்புக் கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை காணவில்லை என்று பெற்றோர் புகார் அளித்ததாக கூறி, அவர்களை காஞ்சிபுரம் போலீசார் அழைத்துச் சென்றனர். காஞ்சிபுரத்தில் உயிருக்கு பாதுகாப்பில்லை என்பதால் அங்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று கூறி காதல் ஜோடி போலீசாரிடம் கதறி அழுதனர்.

News March 22, 2025

வரும் 29ஆம் தேதி கிராம சபை கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் உள்ள 274 ஊராட்சிகளில், வரும் 22ஆம் தேதி ‘உலக தண்ணீர்’ தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால், நிர்வாக காரணங்களால் 23ஆம் தேதிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அது மீண்டும் மாற்றப்பட்டு வரும் 29ஆம் தேதி அன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

News March 22, 2025

காஞ்சிபுரம் நலவாழ்வு மையத்தில் வேலைவாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டம் நலவாழ்வு சங்கம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், 24 காலி பணியிடங்கள் உள்ளது. நர்ஸ், மெடிக்கல் ஆபிஸர், ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 20 – 50 வரை வயதுடைய தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.8,500 – ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பங்களை தபால் மூலம் வரும் மார்ச் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 22, 2025

குடிநீா் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது

image

காஞ்சிபுரம் கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம். குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

News March 21, 2025

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மார்ச் – 29 கிராம சபை

image

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற உலக தண்ணீர் தினமான 22.03.2025 அன்று நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு 29.03.2025 அன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கிராம சபைக் கூட்டங்களில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

error: Content is protected !!