Kanchipuram

News October 10, 2024

சாம்சங் தொழிலாளர்களை சந்தித்த சீமான்

image

ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரத்தில் போராடி வரும் சாம்சங் தொழிலாளர்களை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தொழிலாளர்களின் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்றும் அவர்களிடம் சீமான் உறுதியளித்தார். இதில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். இதனால், மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைக்க வாய்ப்புள்ளத.

News October 10, 2024

நகரீஸ்வரர் கோயிலில் 21ஆம் தேதி கும்பாபிஷேகம்

image

காஞ்சிபுரம் கிழக்கு ராஜ வீதி பேருந்து நிலையம் அருகில், நகரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை பராமரப்பில் உள்ள இக்கோயில், பல்வேறு திருப்பணிகளுடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி வரும் 18ஆம் தேதி நவக்கிரஹ ஹோமம், தனபூஜை, சாஸ்த்ர ஹோமமம், யாகசாலை நிர்மாணம் உள்ளிட்டவை நடக்கிறது. வரும் 21ஆம் தேதி மூலஸ்தானம் மற்றும் பரிவாரங்களுக்கு கும்பாபிஷேகம் தொடங்குகிறது.

News October 10, 2024

மக்கள் தொடர்பு முகாம்: 45 மனுக்கள் பெறப்பட்டன

image

அக்டோபர் மாதத்திற்கான மக்கள் தொடர்பு முகாம், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள மேல்ஒட்டிவாக்கம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 45 மனுக்கள் பெறப்பட்டன. பின், மனுக்கள் தீர்வு காணப்பட்டு 162 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி வழங்கி சிறப்பித்தார்.

News October 10, 2024

சாம்சங் ஊழியர்கள் 625 பேர் மீது வழக்கு

image

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள், எச்சூர் கூட்டுரோடு அருகே சிஐடியு மாநில தலைவர் சௌந்திரராஜன், மாவட்டச்செயலாளர் முத்துகுமார் தலைமையில் நேற்று போராட்டம் நடத்தினர். பந்தல் அகற்றப்பட்டதால் ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 625 பேரை கைது செய்து பின் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் தெரிவித்துள்ளது.

News October 10, 2024

போராட்டத்தில் ஈடுபட வந்த சாம்சங் ஊழியர்கள் 30 பேர் கைது

image

சுங்குவார்சத்திரம் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள், கடந்த 9ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றும் சுமுகமான முடிவு இன்னும் எட்டாததால், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியபோதும், சுங்குவார்சத்திரத்தில் இன்று போராட வந்த சாம்சங் ஊழியர்கள் 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

News October 10, 2024

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை

image

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை நீட்டித்து 2024-2025 முதல் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் 50 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் வீதம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் தெரிந்து கொள்ள 044-29998040 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News October 10, 2024

ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள்

image

காஞ்சிபுரத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம், கடந்த ஆக.28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் இணைய வழியாகவும், இந்திய தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.in என்ற இணையதளம் மூலம் நேரடியாகவும் விண்ணப்பம் செய்யலாம். இதற்காக அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், நவ.9, 10, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என கலெக்டர் கூறினார்.

News October 10, 2024

புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் விழா

image

பரணிபுத்தூர், மாங்காடு சாலையில் உள்ள சக்தி பேலஸ் மண்டபத்தில், புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் விழா மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பாராளுமன்ற, உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில், பொதுமக்கள் பலருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

News October 10, 2024

தேவரியம்பாக்கம் தலைமை ஆசிரியருக்கு பதவி உயர்வு

image

தமிழக முழுவதும் பள்ளிக்கல்வித்துறையால் 45 தலைமை ஆசிரியர்கள், தொடக்கக்கல்வி அலுவலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த சி.ஏழில் என்பவருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

News October 10, 2024

சுமுகத் தீர்வு காண வேண்டும்: ந்தியத் தொழில் கூட்டமைப்பு

image

சாம்சங் தொழிலாளர் விவகாரத்தில், சுமுகத் தீர்வு காண வேண்டும் என்றும், தொழிலாளர்கள், நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் சுமுக தீர்வு காண வேண்டும் என்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்துள்ளது. பொருளாதார நடவடிக்கைகள் முடங்காத வகையில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், தமிழ்நாடு தொழில் துறைக்கு உகந்த மாநிலம் என்ற நற்பெயர் தொடர வழிவகுக்க வேண்டும் எனத் தெரிவித்தது.