India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக பால் விநியோகம் பிரதான தொழிலாக உள்ளது. அட்சன், ஜெர்சி நிறுவனங்களுக்கு பாலை விநியோகம் செய்து வருகின்றனர். கனமழை காலங்களில் புல்வெளிகளில் மழைநீர் தேங்கி மாடுகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும். ஏற்கெனவே தீவன விலைவாசிகள் அதிகம் உள்ள நிலையில் பாலுக்கு வழங்கப்படும் விலையை கூடுதலாக தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் வரும் 15ஆம் தேதி இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால், வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. மேலும், 15ஆம் தேதி காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில், கடந்த 30 நாட்ககளுக்கும் மேலாக தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று ஆயுத பூஜை விடுமுறை நாள் என்பதால், இன்று ஒரு நாள் போராட்டம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது.
குழந்தைகள் திருமண சட்டத்தின்படி, பெண்களுக்கு 18 வயதுக்குள் மற்றும் ஆண்களுக்கு 21 வயதுக்குள் திருமணம் நடத்தக் கூடாது. சட்டத்தை மீறி, திருமணம் நடத்துவது அல்லது ஆதரிப்பது சட்ட்டபடி குற்றம். அப்படி திருமணம் நடைபெறுவது கண்டறிப்பட்டால், அவர்களுக்கு குழந்தை திருமண சட்டத்தின்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 ஊராட்சிகள் உள்ளன. இதில், தலா 100 ஏக்கர் பரப்பளவில் 380 ஏரிகள் உள்ளன. சீரமைப்புக்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 91 சிறு ஏரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஏரிகள் வேறு ஏதேனும் திட்டத்தில் சீரமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் நிதி ஒதுக்கீடு பெற்று சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என அத்துறையினர் கூறினர்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய, இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று வருகை தந்தார். கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் உள்பட நிர்வாகிகள் பலர் அவருடன் வந்திருந்தனர். தரிசனத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவா், “சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னையை திமுக அரசு கவனமாக கையாவில்லையெனில் சாம்சங் தொழிற்சாலை வேறு மாநிலத்துக்கு சென்று விடலாம்” என்றாா்.
பிரபல தொழில் அதிபரும், டாடா நிறுவனத்தின் தலைவருமான ரத்தன் டாடா, நேற்று முன்தினம் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ஓவியர் சங்கர், ரத்தினம் டாட்டா புகைப்படத்தை கருப்பு மையால் தத்துரூபமாக வரைந்துள்ளார். அவரது இந்தச் செயல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரத்தில், தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ், 10ஆம் வகுப்பு தோல்வி – ரூ.200, தேர்ச்சி – ரூ.300, +2 தேர்ச்சி அல்லது பட்டயப்படிப்பு – ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சி – ரூ.600 மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இதில், பயன்பெற விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலல்து www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்தை பெற்றுக் கொள்ளலாம். ஷேர்
சுங்குவார்ச்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. பேச்சு வார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால், நாள்தோறும் பணியை புறக்கணித்து போராடி வருகின்றனர். ஊழியர்களின் போராட்டத்திற்கு, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்து வருகின்றன. இதனால், மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
காஞ்சிபுரம், ஓரிக்கை, பேராசிரியர் நகர் பகுதி-2ல் குபேர விநாயகர் கோயில் உள்ளது. நேற்று காலை 8:30 மணிக்கு தன்வந்திரி பாபாவுக்கு பாலாபிஷேகம், அலங்காரம் & ஆரத்தி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் குபேர விநாயகர், கோடீஸ்வரர், பகவதி புவனேஸ்வரியம்மன், பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருமாரியம்மன், அய்யப்பன், பாலமுருகன், கால பைரவர் சிறப்பு பூஜை செய்யபட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Sorry, no posts matched your criteria.