India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். இந்த தாழ்வு பகுதி அக்.24இல் மேற்குவங்கம், ஒடிசா கடற்கரையையொட்டி ‘டானா’ புயல் கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது, ஒடிசா, மேற்குவங்கம் நோக்கி நகர்வதால் தமிழ்நாட்டில் எந்த தாக்கமும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் புரி அருகே இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில், திமுக இளைஞரணி மாவட்ட, மாநில, அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் இன்று (அக்.22) நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளர் சுகுமார் உள்ளிட்ட மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலினுடன் உரையாடினர். அப்போது, சட்டமன்ற தேர்தல் குறித்தும், உறுப்பினர் சேர்க்கை குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று காலை வங்க கடலில் உருவானது. இதன் காரணமாக, சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் நீக்க வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் குடை அல்லது ரெயின் கோர்ட் எடுத்துச் செல்லுங்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சார்பில், பல்லாவரம், செம்பாக்கம், மேற்கு தாம்பரம் சண்முகம் சாலை, ஆலந்தூர், போரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பட்டாசு கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில், நாளை முதல் பட்டாசு விற்பனை தொடங்குகிறது. பட்டாசு விற்பனையில், முறைகேடுகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
பரந்துார், நாகப்பட்டு துணை கிராமத்தில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி உள்ளது. மேல் மூடி இல்லாத அந்த தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த 13 பேர், வயிற்றுப்போக்கு காரணமாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நேற்று, நாகப்பட்டு கிராமத்தில் ஆய்வு செய்தனர். கிராம மக்களுக்கு வயிற்றுப்போக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
ஒரடகம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் ஏற்கனவே 7 சிப்காட் தொழிற்பூங்காக்கள் இயங்கி வருகிறது. இந்த நிலையில், உத்திரமேரூரில் 750 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, காஞ்சி நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளது. இதற்காக, திருப்புலிவனம் கிராமத்தை சுற்றி புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க தேவையான அடிப்படை விபரங்களை வருவாய் துறையினர் சேகரிக்க தொடங்கியுள்ளனர்
பட்டுகோட்டை, பொள்ளாச்சி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காஞ்சிபுரத்திற்கு தேங்காய்கள் வரவழைக்கப்படுகிறது. இன்று (அக்.22) தேங்காய் வரத்து குறைந்துள்ளதால் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் வரத்து குறைவால் 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறிய தேங்காய் ரூ.20க்கும், ரூ.20க்கு விற்கப்பட்ட மீடியம் சைஸ் தேங்காய் ரூ.30க்கும், ரூ.30க்கு விற்கப்பட்ட தேங்காய் 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தை வெற்றிகரமாக்கிய சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் இ.முத்துக்குமார், பொதுச்செயலாளர் எல்லன் ஆகியோர் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட 24ஆவது மாநாட்டில் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் நேற்று ‘காரல் மார்க்ஸ்’ சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.
குன்றத்தூர், பரணிபுத்தூர் அருகே உள்ள மாங்காடு சாலையில் உள்ள சக்தி பேலஸில், புதிய மின்னணு குடும்ப அட்டை, கல்விக் கடன் மேளா மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு டிப்பர் லாரிகள் வழங்கும் விழா இன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன், அண்மையில் பாரீஸில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில் இறகுப்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற 100 பேருக்கு அரசுப் பணி தமிழக அரசு சார்பில் மேற்கொண்டுள்ளது. துளசிமதி முருகேசனுக்கு தற்போதைய தகவலின்படி துணை ஆட்சியர் நிலையிலான பணியை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.