India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரத்தில் விவசாயிகள் தங்கள் விவசாய அட்டையை பெறுவதற்கு, வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் விவசாய அட்டை பெறாவிடில், மத்திய அரசு வழங்கும் ரூ.6,000 நிதி உதவியை முடியாது. எனவே, வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் ஒவ்வொரு கிராம உழவர் அலுவலர்களையும் தொடர்பு கொண்டு விவசாய அட்டையை பெறுமாறு விவசாயிகளுக்கு தோட்டக்கலை அதிகாரி மற்றும் விவசாய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 95 இடங்கள் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு சார்பில் 33 இடங்கள் என மொத்தம் 128 இடங்களில், நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால், நெல் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகள் விவகாரத்தில் ஆளுங்கட்சியினர் தலையீடும், ஊராட்சி தலைவர்கள் தலையீடும் இருக்க வேண்டாம் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன. 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். <
காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர்மேடு பகுதியில் வசிக்கும் இளங்கோ (32), காஞ்சிபுரம் நகரில், மாட்டு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்கிறார். இந்நிலையில், பிள்ளையார்பாளையம் கிழக்கு பகுதியில் நேற்று (மார்.20) வியாபாரம் செய்தபோது, உதயா (19) என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி கத்தியை காட்டி ரூ.1,000 பணத்தை பறித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி உதயாவை அதிரடியாக கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2023இல் 34 கொலைகள் நடந்ததாகவும், 2024இல் அவை 20ஆக குறைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில், 2025ஆம் ஆண்டு தொடங்கியது முதல் முக்கிய ரவுடிகளின் செயல்பாடுகள் போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரத்தின் பிரபல ரவுடிகளான தியாகு, தினேஷ் மற்றும் தணிகா ஆகிய மூவரையும் தேடி பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள வழக்கறுத்தீஸ்வரர் சிவாலயம், முனிவர்கள், தேவர்கள் இடையே ஏற்பட்ட விவாதத்தை தீர்ப்பதற்காக, இறைவன் இங்கு தோன்றியதாக ஐதீகம். இக்கோயிலில், வழக்குகளில் சிக்கியவர்களும், தொழில் மற்றும் பதவியில் உயர்வு வேண்டுவோரும் 16 வாரங்கள் தீபம் ஏற்றி வலம் வந்தால் பிரச்சினைகள் தீரும் என நம்பப்படுகிறது. பல அரசியல்வாதிகள், பிரபலங்கள் இக்கோயிலில் வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அஞ்சல் துறையின் ஒரு பிரிவான இந்திய அஞ்சல் கட்டண வங்கியில், காலியாக உள்ள 51 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் நாளைக்குள் (மார்.21) இந்த <
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், ஆட்சியர் கலைச்செல்வி முன்னிலையில், குலுக்கல் முறையில் பேருந்துகளை இயக்கும் விண்ணப்பதாரர்கள் நேற்று (மார்ச்.19) தேர்வு செய்யப்பட்டனர். இதில் காஞ்சிபுரம் – பாலுசெட்டிசத்திரம், களியனூர் – பண்ருட்டி சிப்காட் வரை என முக்கிய வழித்தடங்களில், மினி பேருந்துகள் 25 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாலாஜாபாத் அடுத்த நத்தாநல்லூர் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பூபதி (29). நேற்று (மார்.19) காலை பைக்கில் எழிச்சூரில் உள்ள தொழிற்சாலைக்கு இன்டர்வியூக்கு சென்றுவிட்டு, மாலை வீட்டிற்கு திருப்பினார். எழிச்சூர் – பண்ருட்டி கண்டிகை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றோரு பைக் பலமாக மோதியது. இதில் பூபதி உயிரிழந்தார். மற்றோரு பைக்கில் வந்த ராமலிங்கத்திற்கு 2 கால்கள், வலது கை முறிந்தது.
உத்திரமேரூர், அரசாணைமங்கலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த 16ஆம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த இளஞ்செழியன் (35) என்பவர், சிறுமியின் வீட்டிற்குள் சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து, சிறுமியின் அக்கா காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் இளஞ்செழியனை போக்சோவில் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.