India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம், ஏனாத்தூர் அமைந்துள்ள சங்கர பல்கலைக்கழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற மார்ச் 15 சனிக்கிழமை நடைபெறுகிறது. இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் நேர்காணல் நடத்த உள்ளனர். வேலை வாய்ப்பு பெற விரும்புவோர் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். முகாம் காலை 8.30 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெறும்.
208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளதால், மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் 208 மருத்துவர்கள் மற்றும் நர்சுகள், 832 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். மருத்துவர்களுக்கு மாதம், ரூ.60,000, நர்சுகளுக்கு ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் இந்த <
பிரதமர் கௌரவ உதவித்தொகை விவசாயிகள் அல்லாத வேறு நபர்களுக்கு சென்றுவிடக்கூடாது என இணைய வழியில் பதிவு செய்து, மத்திய அரசு கௌரவ நிதி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கி வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24,537 விவசாயிகள். திருவள்ளூர் மாவட்டத்தில் 41,973 விவசாயிகள். செங்கல்பட்டு மாவட்டத்தில் 27,190 விவசாயிகள் என மொத்தம் 93,700 விவசாயிகள் பிரதமரின் கவுரவ உதவி தொகை பெறுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 15, 16) வெப்பம் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டை நெருங்கியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளூர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு (45). இவர், ஹாலோ பிளாக் சிமெண்ட் கற்கள் செய்யும் தொழில் செய்து வந்தார். நேற்று (மார்.14) காலை வீட்டின் அருகே உள்ள ஹாலோ பிளாக் கற்கள் செய்யும் இயந்திரத்தை அன்புவின் மகன் நிஷாந்த் தொட்டுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற அன்பு முயன்றபோது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தில் அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
தமிழகத்தின், 2025 – 26ம் ஆண்டுக்கான பட்ஜெட், சட்டசபையில் இன்று(மார்.14) தாக்கல் செய்யப்ட்டு வருகிறது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரூ.120 கோடியில் காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையை தரம் உயர்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பொருளாதார ஆய்வறிக்கையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று(மார்.13) வெளியிட்டார். இதில் கடந்த 2024 – 25ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 5.97 லட்சம் கோடி ரூபாய். மேலும் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் முதன்மையானதாக செங்கல்பட்டு மாவட்டம் தனி நபர் வருமானத்தில் 6,47,962 ரூபாயில் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் 6,47,474 ரூபாய்; சென்னை மாவட்டம் 5,19,941 ரூபாய் என முறையே 2,3 இடத்தை பிடித்துள்ளது
2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் தாக்கல் இன்று (மார்.14) சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில், காஞ்சிபுரம், ஈரோடு, கரூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் 800 பெண்கள் பயன்பெறும் வகையில் 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘தோழி’ மகளிர் விடுதிகள் கட்டப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதன் மூலம் படிக்கும் மற்றும் வேலை செய்யும் பெண்கள் பயன் அடைவார்கள்.
2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதில், சென்னை பூந்தமல்லி – போரூர் மெட்ரோ வழித்தடம் இந்தாண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9335 கோடி ஒதுக்கீடும், பூந்தமல்லி – ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மித அதிவேக ரயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். சென்னை – திண்டிவனம் – விழுப்புரம் மற்றும் சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் ஆகிய வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும என 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.