Kanchipuram

News March 16, 2025

படப்பை குணா 5 வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது

image

படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் மாவட்ட பொறுப்பில் உள்ளார். இதனையடுத்து படப்பை குணாவும் கடந்தாண்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக காஞ்சிபுரம் மாவட்ட ஓ.பி.சி அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் படப்பை குணா மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. படப்பை குணா தற்போது 5வது முறையாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News March 16, 2025

மின்னணு தொழிற்சாலைகள்: மத்திய அமைச்சர்

image

திருவள்ளூரில் நேற்று (மார்.15) நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்று பேசினார். அப்போது, “நாடு முழுவதும் மின்னணு தொழிற்சாலைகள் தொடங்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் மற்றும் மணலூர் ஆகிய இடங்களில் ரூ.1,112 கோடி மதிப்பில் மின்னணு தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன” என்றார்.

News March 16, 2025

காஞ்சிபுரத்தில் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’

image

தமிழகத்தில், ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ கடந்த ஆண்டு காஞ்சிபுரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட 8 இடங்களில் சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் அதே 8 இடங்களில் நடத்தப்படவுள்ளது. இவ்விழாவில் நிகழ்ச்சி நடத்த விரும்பும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சி பதிவு, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

News March 16, 2025

இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு: கொட்டிக்கிடக்கும் வேலை

image

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஒரே நேரத்தில் 2 பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.

News March 16, 2025

ரவுடி கொலை வழக்கில் 10 பேர் கைது

image

திருக்காலிமேடு பகுதியில் ரவுடி வசூல் ராஜா கடந்த 11ஆம் தேதி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். போலீசார் அவர்களைத் தேடி வந்த நிலையில், கொலையில் தொடா்புடைய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பரத் (20), சிவா (19), திலீப்குமார் (19), சூர்யா (19), சுரேஷ் (21), ஜாஹீர் ஹூசேன் (25), சுல்தான் (32), சரண்குமார் (19), மணிமாறன் (19), மோகன சுந்தரம் (18) ஆகிய 10 பேரை தனிப்படை போலீசார் நேற்று (மார்.15) கைது செய்துள்ளனர்.

News March 15, 2025

காஞ்சிபுரதிற்கு புதிய நெல் சேமிப்பு வளாகம்  

image

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 15) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க ரூ.17,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவித்தார். காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் நெல் சேமிப்பு வளாகங்கள், 25,000 இரும்பு இடைச்செருகுக் கட்டைகள் உள்ளிட்டவை செயல்படுத்திட ரூ. 480 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

News March 15, 2025

ரூ.148 கோடி செலவில் புதிய தொழில் பயிற்சி நிலையங்கள்

image

காஞ்சிபுரத்தில் கட்டுமான தொழிலாளர்கள் அதிக அளவு வசித்து வருகின்றனர். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய உதவியுடன் 148 கோடி ரூபாய் செலவில், காஞ்சிபுரம் உட்பட்ட 7 மாவட்டங்களில் புதிய அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் அமைய உள்ளன. சுமார் 6 தொழிற்பிரிவுகளுடன் இந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என 2025-26ஆம் ஆண்டின் தமிழக அரசு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 15, 2025

ஏப்.30ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம்

image

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் தலைமை தோ்தல் ஆணையராக ஞானேஷ்குமாா் பொறுப்பேற்றுள்ளாா். இவரது தலைமையில் மாநில தலைமைத் தோ்தல் அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் அண்மையில் புது தில்லியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தோ்தல் அலுவலா்களிடம் தீா்க்கப்படாத பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கருத்துருக்களையும், ஆலோசனைகளையும் வரும் ஏப்.30ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என காஞ்சிபுரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 15, 2025

காஞ்சிபுரம்: வேலையில்லா பட்டதாரிகள் கவனத்திற்கு

image

காஞ்சிபுரம், ஏனாத்தூர் அமைந்துள்ள சங்கர பல்கலைக்கழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற மார்ச் 15 சனிக்கிழமை நடைபெறுகிறது. இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் நேர்காணல் நடத்த உள்ளனர். வேலை வாய்ப்பு பெற விரும்புவோர் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். முகாம் காலை 8.30 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெறும்.

News March 15, 2025

மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களுக்கு வேலை

image

208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளதால், மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் 208 மருத்துவர்கள் மற்றும் நர்சுகள், 832 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். மருத்துவர்களுக்கு மாதம், ரூ.60,000, நர்சுகளுக்கு ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!