Kanchipuram

News August 21, 2024

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30 இலட்சம் கடனுதவி

image

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30 இலட்சம் மதிப்பிலான வங்கி கடனுதவிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். திருப்பெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், கூட்டுறவு துறை சார்பில் கடனுதவி வழங்கபட்ட இந்நிகழ்வில் கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

News August 21, 2024

முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில், முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் (ஆக.22) நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே இந்த சிறப்பு குறைதீர்வு நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படை வீரர்களை சார்ந்தோர்கள் தங்களின் அடையாள அட்டையுடன் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 21, 2024

போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது

image

சாம்சங் நிறுவனத்திற்கு உதிரிபாகம் தயாரிக்கும் எஸ்.எச்.எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர்கள், கடந்த ஜூன் மாதம் சிஐடியு தொழிற்சங்கத்தை அமைத்தனர். அதற்காக, சங்கத்தின் 12 நிர்வாகிகளை எந்த காரணமுமின்றி நிறுவனம் பணியிட நீக்கம் செய்தது. இதனை கண்டித்து, தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இன்று போராட்டம் நடத்தினர். பின்னர், போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்தனர்.

News August 21, 2024

பெண் குழந்தை விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

காஞ்சிபுரத்தில் 13 முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளில், சாதனைகள் புரிந்தவர்கள் சிறந்த பெண் குழந்தை விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜன.24ஆம் தேதி மாநில அரசின் சார்பில் இவ்விருது வழங்கப்படுகிறது. அவர்களுக்கு, ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் நவம்பர் 20க்குள் விண்ணப்பிக்கலாம்.

News August 21, 2024

சங்கரமட மடாதிபதியுடன் அண்ணாமலை சந்திப்பு

image

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று காஞ்சிபுரத்துக்கு வருகை தந்தார். அப்போது, காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட ஓரிக்கை பகுதியில் உள்ள மகா பெரியவர் மணிமண்டபத்திற்கு நேரில் சென்று, அங்குள்ள சங்கரமட மடாதிபதியின் விஜேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, சங்கர மடம் சார்பில் அண்ணாமலைக்கு சிறப்பு வரவேற்பு அளித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

News August 21, 2024

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆகஸ்ட் 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம், நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News August 21, 2024

முதல்வர் கோப்பை போட்டிகள்: ஆட்சியர் அழைப்பு

image

மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்க sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 25ஆம் த்திக்குள் முன்பதிவு செய்து, அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்யலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று தெரிவித்துளார்.

News August 21, 2024

காஞ்சிபுரத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 21) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேல்படுவூா், தண்டலம், கண்டிவாக்கம், பிச்சிவாக்கம், கோட்டூா், கொட்டவாக்கம், ஏகனாபுரம், நாகப்பட்டு, ஆண்டி சிறுவள்ளூா், சிறுவாக்கம், காரை, சின்னிவாக்கம், மதுரமங்கலம், கண்ணன்தாங்கல், சிங்கில்பாடி, தொடுா், நீா்வள்ளூா், ராஜகுளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

News August 21, 2024

கடந்த 3 ஆண்டுகளில் 6,588 பேருக்கு புற்றுநோய்

image

காரைப்பேட்டை அண்ணா புற்றுநோய் மருத்துவமனை வாயிலாக, கடந்த 3 ஆண்டுகளில் 28,000 பேருக்கு பரிசோதனை செய்ததில் 6,588 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்துள்ளார். குறிப்பாக, புகையிலை பயன்படுத்துவதால் ஆண்களுக்கு வாய் புற்றுநோய் அதிகளவு உள்ளது. புதிய மருத்துவமனை கட்டடம் பயன்பாட்டுக்கு வந்தால், கூடுதாக பல வசதிகளும், சேவைகளும் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

News August 20, 2024

ஒன்றரை வயது குழந்தையை கடித்த நாய்கள்

image

வாலாஜாபாத் அடுத்த நாய்க்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் – சுவேதா தம்பதியர். இவர்களது ஒன்றரை வயது குழந்தை பவிஷ் இன்று காலை விளையாடி கொண்டிருந்தபோது, தெரு நாய்கள் சரமாரியாக கடித்தது. இதில், பலத்த காயமடைந்த குழந்தை வாலாஜாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. நாய் தொல்லை குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாற்றியுள்ளனர்.

error: Content is protected !!