India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம், இன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள டீக்கடை பெஞ்ச் பாய்ஸ் மற்றும் கம்மாளம்பூண்டி கிராம இளைஞர்கள் சார்பாக 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அத்தியூர், மேட்டுப்பாளையம் போன்ற கிராமங்களிலும் மற்றும் ஏரி கரை சுற்று பகுதிகளிலும் நட்டு சூழலுக்கு நன்மை செய்யும் விதமாக இப்பணிகளை இந்த இளைஞர்கள் மேற்கொண்டனர். இவர்களின் இச்செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சென்னை தின விழாவை ஒட்டி சென்னை ராணி மேரி கல்லூரியில் உள்ள பொன்விழா கலையரங்கில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒராகடம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், நாளை 23.08.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 14.00 மணி வரை வெங்காடு, நாவலூர், பிள்ளைப்பாக்கம், TVH Apartment, பிள்ளைப்பாக்கம் சிப்காட் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு வீரர் வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடைபெறவுள்ளன. வரும் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை நடைபெறவுள்ள இப்போட்டிகளுக்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் முன்பதிவு தொடங்கியுள்ளது.
காஞ்சிபுரத்தில் பிரதான வியாபாரமானது பட்டு சேலை விற்பனை. இந்நிலையில் முகூர்த்த நாட்கள் இல்லாத கடந்த ஆடி மாதத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள கூட்டுறவு கைத்தறி விற்பனை சங்கங்களில் பட்டு சேலை விற்பனை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று காந்திரோடு, நடுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டு சேலை கடைகளில், வெளியூர் வாடிக்கையாளர்கள் குவிந்தனர். இதனால் பட்டு சேலை வியாபாரம் மீண்டும் களைகட்டியது.
தமிழகத்தில் 2026ல் பாஜக ஆட்சி அமைக்கும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் செவிலி மேட்டில் பேட்டி அளித்த அவர், கொல்கத்தாவில் நடைபெற்ற மருத்துவர் பாலியல் வன்கொடுமை, கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார். பாஜகவில் ஒன்றரை கோடி உறுப்பினர் சேர்க்க உள்ளதாகவும் தமிழிசை கூறினார்.
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் வரும் ஆக.28ஆம் தேதி நடைபெற உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 25-03-2007 அன்று நடைபெற்றது. தொடா்ந்து இக்கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாக சாலை பூஜைகள் வரும் ஆக.25-ஆம் தேதி தொடங்குகிறது. இதன் தொடா்ச்சியாக வரும் ஆக.28ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் அன்று இரவு பெருமாள் வீதியுலாவும் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் நகரில் உள்ள தனியார் மஹாலில் பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கம் 2024 மற்றும் மாநில பயிலரங்கம் இன்று (ஆக. 21) நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஹெச்.ராஜா, வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30 இலட்சம் மதிப்பிலான வங்கி கடனுதவிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். திருப்பெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், கூட்டுறவு துறை சார்பில் கடனுதவி வழங்கபட்ட இந்நிகழ்வில் கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.