India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களின் விபரங்களை, வரும் அக்.18ஆம் தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று சரிபார்க்க உள்ளனர். குடும்பத்தில் எத்தனை பேர் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளார்கள், விடுப்பட்ட வாக்காளர்களை சேர்த்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தால் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள செயலி வழியாக ((BLO APP) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரத்தில் குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், 2000 – 01ம் நிதி ஆண்டிற்கு முன், கட்டிய வீடுகளில் பெரும்பாலான வீடுகள், சுவர் விரிசல், கூரை என, பல்வேறு நிலைகளில் சேதம் ஏற்பட்டுள்ளன. இதில் 2,303 சேதமடைந்த வீடுகளை சீரமைக்க தற்போது ஊரக வளர்ச்சித்துறை நிர்வாக அனுமதி அளித்து 14 கோடி ஒதுக்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 148 கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. இங்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்க மருந்து, வெறிநாய் கடி தடுப்பூசி, நோய் எதிர்ப்பு மருந்து ஆகிய மருந்துகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் 3 மாதங்களாக மருந்துகள் வினியோகிக்கப்படவில்லை. இதனால்,கால்நடை மருந்து தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில், வரும் 27ஆம் தேதி காலை 10 மணி அளவில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், குறு, சிறு தொழில் துறை நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, மக்களிடம் குறைகளை கேட்க உள்ளார். பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு, தங்கள் குறைகளை மனுவாக தரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலில், வரும் 28ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கான அறிவிப்பை காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பாரா என்று கமெண்டில் சொல்லுங்க.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு சிறப்பு முகாம், காஞ்சிபுரம் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. எனவே விளையாட்டு வீரர்கள் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று நேரடியாக விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு 74017 03481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
காஞ்சிபுரத்தில், தேசிய குடற்புழு நீக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி இப்பணியை தொடங்கி வைத்தார். இதன்படி, மாவட்டத்தில் உள்ள 1 – 19 வயது வரை உள்ள 3 லட்சத்து 81,186 குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கும், 20 – 30 வயது வரை உள்ள 83,997 பெண்களுக்கு ‘அல்பென்டசோல்’ என்ற மாத்திரை வழங்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்கு வரும் 30ஆம் தேதி அல்பென்டசோல் மாத்திரை அளிக்கப்பட உள்ளது.
மதுரமங்கலம், எம்பார் கோவில் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (35). கட்டுமான கூலித் தொழிலாளியான இவர், நேற்று காலை சக தொழிலாளி முருகன் (48) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். திருமங்கலம் பாரதியார் சாலையில் உள்ள நான்கு முனை சந்திப்பில் வரும்போது, பின்னால் வந்த அரசு பேருந்து, ராஜேஸ்வரி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலின் மகா கும்பாபிஷேகம், வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி கோவில் வளாகத்தில் ஆறு யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு வரும் 25ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்க உள்ளது. முதல் நாள் ஒரு கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து இரு நாட்கள் இரு யாக சாலை பூஜைககள் நடைபெற உள்ளது.
சனி, ஞாயிறு மற்றும் கிருஷ்ண ஜெயந்தி ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு, நேற்றிரவு பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதற்காக, போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில், அனைவரும் சொந்த ஊர்களுக்கு புறப்படுதல், காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் அருகே கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் ஆமை போல் ஊர்ந்து சென்றன.
Sorry, no posts matched your criteria.