India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடுகள் கட்ட உத்திரமேரூர் ஒன்றியத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில், 371 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. உத்திரமேரூர் பி.டி.ஒ., அலுவலக வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், ரூ.12 கோடியே 98 லட்சத்தில் கட்டப்பட உள்ள வீடுகளுக்கான பணி ஆணைகளை காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், உத்திரமேரூர் எம்.எல்.ஏ. சுந்தர் ஆகியோர் வழங்கினர்.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இன்று மற்றும் நாளை (செப்.5, 6) காலை 10 மணி முதல் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய பெண்கள் தேவைப்படுகின்றனர். 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற 19 முதல் 25 வயது வரை உள்ள பெண்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். உணவு, தங்கும் இடம், போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்.
பாரா பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்று பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில், காஞ்சிபுரத்தை சேர்ந்த துளசிமதி வெள்ளிப்பதக்கம் வென்றார். இவருக்கு பிறவியிலேயே இடது கை செயலிழந்த நிலையில், தன் தந்தையின் உதவியோடு போட்டிகளில் அசத்தி வருகிறார். இந்நிலையில், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அண்ணா பூங்காவில் இன்று துளசிமதிக்கு பொதுமக்கள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவரை பாராட்டலாமே!
காஞ்சிபுரம் மாவட்டத்தின் நல வாழ்வுச் சங்கம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமூகப் பணியாளர், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு, விருப்பமுள்ளவர்கள், https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2024/08/2024083084.pdf என்ற இளையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் (செப்.12) க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழக அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ.3.00 இலட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சம் மிகாமல் இருக்க என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பொத்தேரி தனியார் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு பயின்ற ஆந்திராவை சேர்ந்த மாணவர் நிக்கில், கடந்த 31 ஆம் தேதி தாம்பரம் போலீஸ் நடத்திய கஞ்சா வேட்டையில் சிக்கினார். இதனால் நேற்று 4வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, மாணவரின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து மாவட்ட அளவிலான நேரடி வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. காஞ்சி பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் வரும் செப்.21-ஆம் தேதி நடைபெறவுள்ள, இம்முகாமினை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்து உதவவும்.
சென்னை பள்ளிக் கல்வித்துறை சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன்- 2024 விருதுகள் வண்டலூரில் அமைச்சர் உதயநிதி தலைமையில் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு மாவட்ட ஆசிரியர்களின் விவரம் நேற்று வெளியிடப்பட்டது. இதில், சோமங்கலம் வே.கிருஷ்ணகுமார், ஸ்ரீபெரும்புதூர் ரவி, குன்றத்தூர் ராஜேந்திரன், காஞ்சிபுரம் போ.சந்திரசேகரன் உள்ளிட்ட 8 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாராட்டலாமே!
டாஸ்மாக்கில் கூடுதல் பணம் வசூலித்து முறைகேடு செய்த பள்ளிக்கரணை, போரூர், குன்றத்துார், இ.சி.ஆர்., திருத்தணி, காஞ்சிபுரம், மதுராந்தகம், செங்கல்பட்டு பகுதி டாஸ்மாக் உரிமையாளர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ரூ.10க்கும் மேல் பணம் வாங்கிய 40 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களுக்கு தலா ரூ.5,000 – ரூ.9,500 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாள் விழா முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படுமென கட்சி தலைமை அறிவித்திருந்தது. அதன்படி காஞ்சிபுரத்தில் 15-ஆம் தேதியும், உத்திரமேரூரில் 19-ஆம் தேதியும், குன்றத்தூரில் 22-ஆம் தேதியும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன்,முன்னாள் அமைச்சர் சின்னையா வரிசைப்படி பங்கேற்கவுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.