India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உத்திரமேரூர் அடுத்த விசூர் கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில், 256 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட வருவாய் அலுவலர், வளர்ச்சி முகமை அதிகாரி ஆர்த்தி ஆகியோர் வழங்கினர். இதில், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சென்னையில் இரண்டு அமுதம் நியாய விலைக்கடை கட்டிடங்களை உணவு மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “அடுத்த கட்டமாக கொளத்தூர் தொகுதியிலும், அதற்கு அடுத்தக்கட்டமாக காஞ்சிபுரத்திலும் அமுதம் அங்காடி தொடங்கப்படும்” என தெரிவித்தார். இது காஞ்சி மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கரும்பு சாகுபடி என்பது உத்திரமேரூரில் தான் அதிகம் நடைபெறுகிறது. மாவட்ட அளவில், 2023-24ம் நிதியாண்டில் 2,160 ஏக்கர் வேளாண் துறை வாயிலாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 1,476 ஏக்கர் மட்டுமே விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அதேபோல, நடப்பாண்டிலும், 2,160 ஏக்கர் இலக்கு நிர்ணயித்துள்ளனர். ஆனால், இதுவரை 770 ஏக்கர் மட்டுமே கரும்பு சாகுபடி நடந்துள்ளதாக வேளாண் துறை அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொது வினியோக திட்டம் சார்பில், மாதந்தோறும், கிராமம் வாரியாக குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (செப்.14) உத்திரமேரூர் தாலுகாவில் புலிவாய் கிராமத்திலும், காஞ்சிபுரத்தில் ஊவேரியிலும் குறைதீர் முகாம்கள் நடக்க உள்ளன. பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் 16 முன்னணி தொழில் நிறுவனங்களிடமிருந்து தமிழகத்திற்கு ரூ.7016 கோடி முதலீடுகளை ஈர்த்த தமிழக முதல்வர் 14-ஆம் தேதி காலை 7.00 மணிக்கு சென்னை திரும்புகிறார். அவருக்கு, விமான நிலையத்தில் காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து திமுகவினரும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டுமென அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஊதிய உயர்வு ,தொழிற்சங்க அங்கீகாரம் 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் நான்காவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுடன் துறை அமைச்சர் கணேசன் தலைமையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப் 14ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் ஊவேரி, உத்திரமேரூர் வட்டத்தில் புலிவாய், வாலாஜாபாத் வட்டத்தில் அகரம், திருப்பெரும்புதூர், கப்பாங்கோட்டூர், குன்றத்தூர் வட்டத்தில் வழுதலம்பேடு ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு சார்பாக நடைபெற்ற 2024-25 ஆம் நிதியாண்டுக்கான கூட்டம் இன்று (செப்.12) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், கோவை கவுண்டம்பாளையம் எம்எல்ஏ அருண்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாளாக 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் நிர்வாகிகளுடன் இன்று மாலை 3 மணிக்கு பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.
மத்திய பட்டு வாரியத்தின் ஆண்டு அறிக்கை 2022-23ன் படி பைவோல்டின் (Bivoltine) இனப்பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு 2525 மெட்ரிக் டன் அளவு பட்டு உற்பத்தி செய்யப்பட்டது. குறிப்பாக காஞ்சிபுரம், கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், கோவை, சேலம், ஆரணி ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் பட்டு உற்பத்தி சிறந்து விளங்குவதாக அறிக்கை வந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.