Kanchipuram

News September 14, 2024

அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்த சசிகலா வருகை

image

பேரறிஞர் அண்ணாவின் 116ஆவது பிறந்தநாளான நாளை (செப்.15) காலை 10 மணிக்கு, காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா மாலையிட்டு மரியாதை செலுத்த உள்ளார். மேலும், அவருடன் அக்கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் வந்து பங்கு கொள்ள உள்ளனர். இதனைத் தொடர்ந்து, அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

News September 14, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர்

image

தமிழகம் முழுவதும் வரும் 17ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அன்றைய தினம் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அன்றைய தினம் பொது விடுமுறை தினமாக கடைபிடிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

News September 14, 2024

வரும் 16ஆம் தேதி பேரணி நடத்த முடிவு

image

சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே, வரும் 16ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடைபெறும். வரும் 18ஆம் தேதி சென்னையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மேலும், தொழிற்சங்க பதிவு குறித்து நீதிமன்றத்தையும் நாட உள்ளதாக சிஐடியு மாநில தலைவர் சௌந்தராஜன் தெரிவித்தார்.

News September 14, 2024

மானியக்கடன் பெற தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம்

image

காஞ்சிபுரத்தில் இணை மானியத் திட்டத்தின் கீழ் மானியக்கடன் பெற தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். தொழில் முனைவோா் வரும் செப். 19-ல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வாழ்ந்து காட்டுவோம் மதி சிறகுகள் தொழில் மையத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்று தொழில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 8667746682 எண்களில் அழைக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News September 14, 2024

காஞ்சி மாவட்ட நீதிமன்றங்களில் இன்று லோக் அதாலத் 

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்தில், இன்று காலை 10:00 மணிக்கு லோக் அதாலத் நடைபெறவுள்ளது. இதில், நிலுவையில் உள்ள நேரடி வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காணப்படும். சமாதானமாக போகக்கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை, வாகன விபத்து நஷ்டஈடு, கணவன் மனைவி பிரச்னை, ஜீவனாம்சம், உரிமையியல், சிவில், தொழிலாளர், வங்கி கடன் சம்மந்தப்பட்ட நேரடி வழக்குகளுக்கு தீர்வு காணலாம்.

News September 14, 2024

காஞ்சியில் குரூப் 2, 2ஏ தேர்வெழுதும் 17,943 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்

image

குரூப் -2 மற்றும் குரூப்- 2ஏ தேர்வு இன்று (செப்.14) தமிழகம் முழுவதும் நடக்கிறது. இத்தேர்வுக்கு தமிழகம் முழுதும் 8 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 17,943 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 45 மையங்களில், 65 ஹால்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வை கண்காணிக்க, 16 மொபைல் டீம், நான்கு பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

News September 14, 2024

பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும்

image

ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் சாம்சங் தொழிற்சாலையில் ஊழியர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 5ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று, தொழிலாளர் துறை செயலர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் சாம்சங் ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடந்தினர். இதில் உடன்பாடு எட்டாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்த போராட்டத்தை தொடரப் போவதாக ஊழியர்கள் கூறினர்.

News September 14, 2024

முதல்வரை வரவேற்க உள்ள அமைச்சர்

image

முதலீட்டாளர்கள் சந்திப்பை முடித்துவிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று இந்தியா திரும்புகிறார். இந்நிலையில், அவரை வரவேற்கும் விதமாக இன்று காலை 7 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட உள்ளது. இதில், பல்வேறு துறையினர் மற்றும் திமுகவினர் கலந்து கொள்ள உள்ளனர்.

News September 13, 2024

ரயில் சேவை ரத்து: காஞ்சிபுரம் சேவையில் மாற்றமில்லை

image

பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் (செப். 15) ஞாயிற்றுக்கிழமை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.

News September 13, 2024

256 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடியில் நலத்திட்ட உதவி

image

உத்திரமேரூர் அடுத்த விசூர் கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில், 256 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட வருவாய் அலுவலர், வளர்ச்சி முகமை அதிகாரி ஆர்த்தி ஆகியோர் வழங்கினர். இதில், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

error: Content is protected !!