Kanchipuram

News September 18, 2024

வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்தது!

image

காஞ்சிபுரம் சந்தைக்கு பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் தக்காளியின் வரத்து குறைந்ததால், விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து பூக்கடை சத்திரம் தக்காளி வியாபாரி ஒருவர் கூறியதாவது: ஆந்திராவில் வெள்ள பாதிப்பு உள்ளதால் தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. எனவே, கடந்த மாதம் கிலோ ரூ.20க்கு விற்ற தக்காளி, தற்போது ரூ.40க்கு விற்கப்படுகிறது என்று கூறினார். உங்கள் பகுதியில் தக்காளி விலை உயர்ந்துள்ளதா?

News September 18, 2024

காஞ்சிபுரத்தில் 5,492 தாய்மார்களுக்கு ரத்த சோகை

image

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், சுகாதாரத் துறை கடந்தாண்டு நடத்திய ஆய்வில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்தாண்டு மட்டும் 17,422 கர்ப்பிணிகள், குழந்தை பெற்றுக் கொண்டனர். இவர்களை சுகாதாரத் துறையினர் கண்காணித்தபோது, 5,492 தாய்மார்கள் ரத்த சோகையுடன் இருந்தது தெரியவந்துள்ளது. கடந்தாண்டு பிறந்த 17,422 குழந்தைகளில், 1,027 குழந்தைகள், இரண்டரை கிலோவுக்கும் குறைவான எடை கொண்டதாக பிறந்துள்ளது

News September 17, 2024

காஞ்சியில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம்

image

காஞ்சிபுரத்தில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. வார இறுதி நாட்களில் மின் தேவையின் அளவு குறைவாக இருக்கும். ஏனெனில், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கும். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஞாயிறு அன்று வார நாட்களை காட்டிலும் அதிக அளவு மின் தேவை இருந்தது. கோடைக்கால மின் தேவையை போல தற்போது ஏற்பட்டிருப்பதாக மின்சார வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

News September 17, 2024

பவள விழாவில் காஞ்சிபுரம் MLA, MP பங்கேற்பு

image

திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பவளவிழா ஆண்டாக இன்று கொண்டாடப்படுகிறது. திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா, சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர். இதில், ‘முதல்வர் ஸ்டாலின்’ விருது வழங்கப்பட்டது.

News September 17, 2024

பெரியார் சிலை காஞ்சி சங்கரமடம் அருகே வந்த கதை

image

காஞ்சிபுரம் சங்கரமடம் அருகே 1974இல் பெரியார் சிலை வைப்பதற்காக, பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அரசு அனுமதி கொடுக்காததால், ராசமாணிக்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, நீதிமன்றத்தின் அனுமதியுடன் சங்கர மடம் அருகே பெரியார் சிலை வைக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டு பிப்.24ஆம் தேதி அன்று திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கி. வீரமணி பெரியார் சிலையைத் திறந்து வைத்தார். ஷேர் பண்ணுங்க.

News September 17, 2024

காஞ்சிபுரத்தில் 40,918 பேருக்கு 100 நாள் வேலை

image

காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. மத்திய அரசு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மூலம் 1.45 லட்சம் பேருக்கு 100 நாள் வேலைக்குரிய வருகை பதிவேடு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40,918 பேருக்கு 100 நாள் வேலை வழங்கப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க.

News September 17, 2024

கிளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் அனுமதி கோரியது

image

பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜிஸ், காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கத்தில் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க இன்று சுற்றுச்சூழல் அனுமதி கோரியது. இந்த தொழிற்சாலையானது, பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.640 கோடியில் அமைய உள்ளது. இதற்காக கடந்த ஜனவரி மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

News September 17, 2024

மதுபோதையில் மனைவியை கொன்ற கணவன் கைது

image

திருவண்ணாமலையைச் சோ்ந்தவா்கள் வேலு(42) – சுமதி(39) தம்பதியினர். இவர்கள், கடந்த 5 மாதங்களாக ஶ்ரீபெரும்புதூர் அடுத்த ராஜலட்சுமி நகரில் தங்கி மரம் வெட்டும் வேலை செய்து வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த வேலு, சுமதியின் தலையை கத்தியால் வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து புகாரின் பேரில் ஶ்ரீபெரும்புதூர் போலீசார் வேலுவை கைது செய்தனர்.

News September 17, 2024

காஞ்சிபுரத்திற்கு வந்த உள்துறை அமைச்சர்

image

காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக, ஆந்திரா மாநிலத்தின் உள்துறை அமைச்சர் வெங்கலபடி அனிதா இன்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். கட்சியி நிர்வாகிகளுடன் வந்த அவர், அருள்மிகு காமாட்சி அம்மனை மக்களுடன் மக்களாக நின்று தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அவருக்கு பிரசாதமும், குங்குமம் வழங்கப்பட்டது.

News September 17, 2024

9ஆவது நாளாக தொடரும் தொழிலாளர்கள் போராட்டம்

image

ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 9ஆவது நாளான இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 8ஆம் நாளான நேற்று, சிஐடியு தொழிற்சங்கத்தினர், கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!