India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் அடுத்த கிளம்பி கிராமத்தில் இயங்கும் அரசு தொடக்கப் பள்ளியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆய்வு மேற்கொண்டு காலை உணவு திட்டத்தை மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி ஆய்வு மேற்கொண்டார். இதில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்க்கொடி குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் செப்டம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை (செப்.20) காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 4 ஒன்றியங்களில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 102 ஏரிகளுக்கான, ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்க தேர்தல் வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. இன்று மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் மொத்தம் 582 பதவிகளுக்கு இத்தேர்தல் நடக்கிறது.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், பெரியார் பிறந்தநாளையொட்டி வரும் அக்.17ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வாலாஜாபாத் அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. வைக்கம் வீரர், பெரியாரின் சமூகச் சீர்த்திருத்தங்கள், சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட தலைப்புகளில் போட்டி நடைபெற உள்ளது. முதல் 3 இடங்களை பிடிப்போர்களுக்கு ₹5,000, ₹3,000, ₹2,000 வழங்கப்படும்.
காஞ்சி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் வரும் 20ஆம் தேதி மாலை 4 மணியளவில் ஆலந்தூர் கத்திப்பாராவில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்தில், அவைத் தலைவர் த.துரைசாமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில், வருகிற செப்டம்பர் 28 அன்று காஞ்சியில் முதல்வர் தலைமையில் பொதுக்கூட்டம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அனைவரும் பங்கேற்க வேண்டுமென அமைச்சர் தா.மோ.அன்பரசன் கேட்டுகொண்டுள்ளார்.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில், அமைச்சர் அன்பரசன் தலைமையில் வரும் 21ஆம் தேதி (சனிக்கிழமை) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில், ASHOK LEYLAND, HYUNDAI, SUTHERLAND, FLEXTRONICS, TVS & MOTHERSON உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் நேர்முக தேர்வு நடத்த உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 044-27237124, 044-27238894 என்ற எண்ணில் அழைக்கலாம்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் பிரபல எலக்ட்ரானிக் தொழிற்சாலையான சாம்சங் தொழிற்சாலையில், 10ஆவது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அங்கீகாரம் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உங்கள் கருத்து?
2024-2025 ஆண்டிற்கான ‘திருக்குறள் முற்றோதல்’ போட்டியில், காஞ்சிபுரத்தில் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மாணவர்கள் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடமாக ஒப்பிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணி நேரத்திற்கு (இரவு 10 மணி வரை) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் என்பதால், பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பெய்யுமா?
காஞ்சி அடுத்த எனாத்தூர் கால்நடை துறை பயிற்சி மையத்தில் (FTC), நாளை (வியாழக்கிழமை) வான்கோழி இனங்கள், தீவன மேலாண்மை, வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகள் பற்றி முனைவர் பிரேம வள்ளி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளார். சுற்றுவட்டார விவசாயிகள் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 88700 20916. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.